காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி டீ குடித்தால் ஏற்படும் மாற்றத்தைப் நீங்களே பாருங்கள்!
நோய்களும் நம்மை நெருங்க அச்சப்பட வேண்டுமென்றால் உடலில் நோய் எதிர்ப்புசக்தி அதிகமாக இருக்க வேண்டும். அதை செவ்வனே அதிகரிக்க செய்கிறது நாம் அன்றாடம் பயன்படுத்தும் இஞ்சி. நமது ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் தான் நம் உடல் எடையை அதிகரிக்கும் முதல் எதிரியாக இருக்கிறது. அதீத உடல் எடையை நாம் இஞ்சி டீ கொண்டே குறைத்துவிடலாம் என்று ஆறுதல் அளிக்கிறார்கள் ஊட்டச் சத்து நிபுணர்கள். ஒரு டம்ளர் இஞ்சி டீயில் ஏகப்பட்ட நன்மைகள் அடங்கியுள்ளன. எனவே இனி தினசரி காலையில் தவறாமல் காபி, டீ- க்கு பதிலாக இஞ்சி டீ குடித்து வரலாம்.
இஞ்சி டீ தயாரிப்பது எப்படி?
2 கப் தண்ணீரில் தோல் நீக்கி துருவிய இஞ்சியைச் சேர்த்து மிதமான தீயில் பத்து நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும். சிறிதளவு எலுமிச்சைச்சாறு மற்றும் இனிப்புக்கு தேவையான அளவு தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். மணம் வேண்டும் என்று விரும்பினால் புதினா சேர்த்துக் கொள்ளலாம்.
காலையில் இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம் -
உடல் எடை இழப்பு
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இஞ்சி ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். இது நமது உடலில் உள்ள இரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது. 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆராய்ச் சியின் படி இது பசியை போக்கி வயிறு நிரம்பிய எண்ணத்தைக் கொடுக்கிறது. இதனால் உடல் பருமன் வரா மல் தடுக்கப்படுகிறது.
குமட்டல்
ஒவ்வாமை, குமட்டல் இயற்கையாகவே சரி செய்யும் குணம் இஞ்சி டீக்கு உண்டு. கருவுற்ற பெண்கள் தொடக்கத்தில் மசக்கை வாந்தியை எதிர்கொள்ள இஞ்சி டீ பயனுள்ளதாக இருக்கும். வெகு தூர பயணங்களின் போது பயணங்களில் வாந்தி உணர்வு ஏற்படாலம் இருக்கவும். அதைக் கட்டுப்படுத்தவும் இஞ்சி டீயை குடித்து விட்டு செல்லலாம்.
மன அழுத்தம்
போக்கும் மன அழுத்தத்தினால் வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் பாதிக்கப்படுகிறது இதனால் ஜீரண சக்தி பாதிப்படைகிறது. இம்மாதிரி நிலைகளில் வெந்நீரில் சிறிது எலுமிச்சைத் துண்டு ஒன்றை பிழிந்து பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சியைப் போட்டு அருந்தினால் பெரிய அளவுக்கு ரிலாக்ஸேஷன் கிடைக்கும். கவலை நிவாரணி இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் என்ற வைட்டமின் நம் ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சு ரசாயங்களை சுத்தம் செய்கிறது. நமக்கு துயரம், கவலை ஏற்படும்போது நச்சு ரசாயனங்கள் நம் உடலில் சுரக்கிறது. இதை இஞ்சி பெருமளவு சுத்தம் செய்துவிடுகிறது. அதனால்தான் கவலை ஏற்படும்போது இஞ்சி டீ குடிப்பது நல்லது.
பெண்களுக்கு
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பைப் போக்க இஞ்சி சாற்றில் நன்றாகத் தோய்த்த துணியை வயிற்றின்மீது வைத்துக்கொண்டால் பெரிய அளவுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.
இரத்த ஓட்டத்தைச் சீராக்குதல்
இஞ்சி டீயில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உடல் உறுப்புகளுக்கசீரான இரத்த ஓட்டத்தைக் கொடுக்கிறது. இதனால் இதய நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது. இஞ்சி இரத்தக் குழாய் களில் படிந்துள்ள கொழுப்புகளைக் கரைப்பதால் ஹார்ட் அட்டாக் மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்கிறது.