அடேங்கப்பா... தினமும் முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமாம்!
சாதரண வெந்தயத்தை விட அவற்றை முளைகட்டிச் சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கிறது. வெந்தயத்தை நீரில் ஊறவைத்து ஒரு ஜாரில் போட்டு ஒரு சுத்தமான துணியால் மூடி வைக்கவும். ஓரிரு நாள்களில் முளைகட்டிவிடும். இந்த முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் அருமையான பலன்கள் கிடைக்கும்.
முளைகட்டிய வெந்தயத்தில் அதிகப்படியான விட்டமின்சி, புரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் ஆல்கலாய்ட்ஸ் நிறைந்திருக்கும். அதோடு ஈஸ்ட்ரோஜனாக கருதப்படும் டயோஸ்ஜெனினும் அதிகமாக காணப்படுகிறது.
முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம் -
சர்க்கரை நோய்
சர்க்கரை நோயாளிகள் தினமும் வெறும் வயிற்றில் முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் வெந்தயத்தில் உள்ள மூலக்கூறுகளால் உடலில் இன்ஸுலின் சுரப்பு அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.
இதயம்
தினமும் முளைகட்டிய வெந்தயம் சாப்பிட்டு வந்தால், உடலில் கெட்ட கொழுப்புகளை சேரவிடாமல் ரத்தத்தின் செயல்பாட்டை சீராக வைக்கிறது. இதனால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எளிதில் நேராது.
உடல் எடை குறைக்க
வெந்தயத்தில் உள்ள காலக்டோமானன் என்னும் உட்பொருள் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கச் செய்யும். மேலும் வெந்தயத்தில் 75% கரையக்கூடிய நார்ச்சத்துள்ள உள்ளது. இதனால், தினமும் முளைக்கட்டிய வெந்தயம் உட்கொண்டு வந்தால் சீக்கிரம் உடல் எடையை குறைக்கலாம்.
இதய நோய்க்கு
தினமும் முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதய பிரச்சனைகள் வரும் அபாயமும் குறைகிறது.
செரிமானம்
தினமும் முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால், செரிமான பிரச்சனைகளான வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம், வயிற்றுப் போக்கு போன்றவற்றை தடுக்கும்.
தாய்மார்களுக்கு
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தினமும் முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால், வெந்தயத்தில் கேலக்டோகோக் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கும். எனவே பிரசவம் முடிந்த பெண்கள் முளைக்கட்டிய வெந்தயத்தை உட்கொண்டால்,தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
சருமம்
முளைகட்டிய வெந்தயம் சருமத்தில் உள்ள அணைத்து செல்களையும் தூண்டுவதால் அவை பாதிப்படையாமல் இருக்கின்றன. இதனால் பருக்கள், கருமை, முக சோர்வு, கரும்புள்ளிகள் அனைத்திற்கும் சிறந்த தீர்வாக அமைகிறது.
உடற் சூடு
வெந்தயம் இயற்கையாகவே குளிர்ச்சி தன்மை கொண்டது. இந்த முளைகட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள சூடு தணிந்து வயிற்று வலி, சூட்டால் ஏற்படும் பருக்கள், முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் தீரும்.