இந்த பூவை கொதிக்க வைத்து குடித்து வந்தால் நீரிழிவு நோய் கிடுகிடுவென குறையுமாம்!

life-style-health
By Nandhini Jul 25, 2021 11:36 AM GMT
Report

உலகை அச்சுறுத்தி வரும் தீரா நோய்களில் நீரிழிவுக்கு தனி இடம் உண்டு. நீரிழிவு வந்தால் அதை குணப்படுத்த முடியாது. ஆனால் கட்டுக்குள் வைக்கலாம். பலரும் செய்யும் தவறுகள் இதை கட்டுப்படுத்தவும் தவறிவிடுவதுதான்.

ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது.

இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான். ஆவாரம்பூக்களையும், கொழுந்தையும் சேர்த்து வெயிலில் காயவைத்து தூள் செய்து, அதில் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கஷாயம் இறக்கி பால் சேர்த்து பருகி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

ஆவாரம் பூக்களை சேகரித்து, பாசிப்பருப்புடன் சேர்த்து, சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை நோயின் தாக்கம் குறையும்.

இந்த பூவை கொதிக்க வைத்து குடித்து வந்தால் நீரிழிவு நோய் கிடுகிடுவென குறையுமாம்! | Life Style Health

தேவையான பொருட்கள்:

ஆவாரம் பூ - 200 கிராம்

சுக்கு - 2 துண்டு

ஏலக்காய் - 3

உலர்ந்த வல்லாரை இலை - 200 கிராம்

சோம்பு - 2 டீஸ்பூன்

செய்முறை:

மேற்க்கண்ட அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒன்றிரண்டாகப் பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும். 

தேவையானபோது அதில் கையளவு எடுத்து அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கால் லிட்டராக ஆகும் வரை சுண்டக் காய்ச்ச வேண்டும். 

அதை வடிகட்டி தேவையான அளவு பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்து வரலாம். 

ஆவாரப் பூவின் மருத்துவப்பயன்:

சர்க்கரை நோய்க்கு கைகண்ட மருந்து ஆவாரம் பூ. சிறுநீர்க் கோளாறுகளை நிவர்த்தி செய்யும். இதய நோய் வாய்ப்புண் சரும நோய்களைப் போக்கும் ஆற்றல் கொண்டது.

ஆவாரம் பூ உஷ்ணத்தைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.