இந்த கத்தரிக்காயை அதிகம் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் பாதிப்பு என்னென்னு தெரியுமா?
கத்திரிக்காய் சைவப் பிரியர்களுக்கு மீன் போன்றது. சுவையும் அருமையாக இருக்கும். எண்ணெய் கத்தரிக்காய் புகழ் பெற்ற உணவு வகைகளில் ஒன்று. அதுவும் நல்லெண்ணெய் மற்றும் பிஞ்சு கத்திரிக்காயில் செய்யும் எந்த சமையலுமே ருசியை அபாரமாக மாற்றும்.
ஆனால் கத்திரிக்காயை எல்லாரும் சாப்பிட முடியாது சிலருக்கு அதை சாப்பிட்டதும் அல்ர்ஜி உண்டாகும். சிறிய பாதிப்பிலிருந்து பெரிய பாதிப்பு வரை உடம்பின் தன்மைப் பொறுத்து மாறும்.
ஏன் கத்திரிக்காய் அலர்ஜியை உண்டாக்குகிறது?
கத்திரிக்காயில் உள்ள புரொட்டின் தான் அலர்ஜியை உண்டாக்குகிறது. முட்டை உருளைக் கிழங்கு ஏன் தக்காளியும் கூட சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். இதற்கு காரணம் அதில் அதிகப்படியான சோலனைன் மற்றும் ஹிஸ்டமின் இருப்பதே ஆகும். சோலனைன் என்ற புரோட்டின் ஜீரண மண்டலம் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு எதிராக இடையூறு விளைவிக்கும். இதனால் வாந்தி, மயக்கம், வயிற்று வலி, தலை சுற்றல், காய்ச்சல் ஆகியவை உண்டாக்கும்.
ஒவ்வாமை
மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயை அதிகம் சாப்பிட்டால் உடலில் அரிப்பு, தோலில் தடிப்பு, உடல் சிவந்து ஒவ்வாமை ஏற்படும். சிலருக்கு மூச்சுக்குழல் சுருக்கம் ஏற்பட்டு, சிறுநீரக செயல் முடக்கம் ஏற்பட்டு ஒவ்வாமையின் உச்சம் வரை அச்சத்தை ஏற்படுத்தி விடும்.
ஆன்ட்டிபயாட்டிக்
கத்தரிக்காயை அதிகம் சாப்பிட்டால் வயிற்றிலுள்ள நலம்தரும் பாக்டீரியாக்களுக்கு கேடு விளைவித்துவிடும். இதனால் சாதாரண பேதி, காய்ச்சல் ஏற்பட்டு, ஆன்ட்டிபயாட்டிக் செயல்திறன் பாதிப்படையும்.
நோய்
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காய் அதிகம் சாப்பிட்டால், சொரியாசிஸ், ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் போன்ற நோய்கள் அதிகமாக பெருக வாய்ப்பு உள்ளது.
மலட்டுத்தன்மை
மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காயை அதிகம் சாப்பிட்டால், ஆண்களுக்கு மலட்டுத் தன்மை உருவாகும்.
வாந்தி, வயிற்று போக்கு
கத்திரிக்காயில் இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளதால் இதனை அதிக அளவில் எடுத்து கொள்வதினால் வாந்தி, வயிற்று போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
கத்தரிக்காயால் ஏற்படும் பக்கவிளைவுகள்
- கர்ப்பிணி பெண்கள் ஆரம்ப காலத்தில் கத்திரிக்காய் சாப்பிடக்கூடாது.
- கத்திரிக்காயை அதிக அளவில் சாப்பிட்டால் அசிடிட்டி பிரச்சினை உண்டாகும்.
- கத்திரிக்காய் சாப்பிட்டால் ஒரு சிலருக்கு அரிப்பு ஏற்படும்.
- எனவே கத்திரிக்காய்க்கு அலர்ஜி உள்ளவர்கள் இதனை சாப்பிட வேண்டாம்.