நாள்தோறும் காலையில் 5 பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் ஏராளமாம்!

life-style-health
By Nandhini Jul 25, 2021 07:50 AM GMT
Report

பேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி6, பி12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக இருக்கின்றன. பண்டைய காலம் முதலே, எகிப்து மற்றும் இஸ்லாமிய மக்கள் பேரிச்சம் பழத்தை அன்றாடம் உண்ணும் பழக்கம் கொண்டிருந்தனர். பேரிச்சம்பழத்தில் வளமான அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்றவற்றைப் பெறலாம். பேரிச்சை சிறந்த டயட் உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. அதிக அமினோ அமிலங்கள், நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளது. பொதுவாக ரத்த சோகைக்கு பரிந்துரை செய்வரகள். ஆனால் அது உடல் எடையை கணிசமாக குறைக்கிறது.

பேரிச்சை இனிப்பாக இருப்பதால் அதிக கலோரி இருக்கும் என நிறைய பேர் ஒதுக்கி விடுவார்கள். அதுபோல் சர்க்கரை வியாதி இருப்பவர்களும் பேரிச்சை சாப்பிடலாம்.

நாள்தோறும் காலையில் 5 பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் ஏராளமாம்! | Life Style Health

நாள் தோறும் காலையில் 5 பேரீட்சைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம் -

கண் பார்வைக்கு

தினமும் காலையில் 5 பேரிச்சம் பழகத்தை சாப்பிட்டு வந்தால், வைட்டமின் ‘ஏ’ குறைவினால் ஏற்படும் கண்பார்வை மங்கலாகும் பிரச்சினை விரைவில் சரியாகும்.

இதய நோய்

தினமும் காலையில் 5 பேரிச்சம் பழகத்தை சாப்பிட்டால்,இதய நோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும் உதவி செய்யும். தொடர்ந்து பேரிச்சம்பழம் உண்டு வருவது 10% ஸ்ட்ரோக் அபாயத்தை குறைக்கும்.

கர்ப்பிணிகள்

தினமும் காலையில் 5 பேரிச்சம் பழகத்தை சாப்பிட்டு வந்தால். கர்ப்பிணிப் பெண் வலியின்றி சுகப்பிரசவம் அடையலாம். கடைசி மாதம் தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வரலாம்.

மூளையின் செயல்பாடு

தினமும் காலையில் 5 பேரிச்சம் பழகத்தை சாப்பிட்டு வந்தால், மூளையின் செயல்பாடு மேம்படும். அதாவது ஞாபக சக்தி, ஒருமுகப்படுத்தும் தன்மை, கூர்மையான புத்தி, எதையும் எளிதில் கற்றுக் கொள்ளும் திறன் போன்றவை அதிகரிக்கும்.

நீரழிவு நோய்

நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவைப்படுவதால் தினமும் காலையில் 5 பேரிச்சம் பழகத்தை சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

மலச்சிக்கல்

பேரிச்சம் பழம் மிகச்சிறந்த மலமிளக்கும் உணவுப் பொருளாக கருதப்படுகிறது. ஏனெனில் இதில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக இருக்கும். அதனால், தினமும் காலையில் 5 பேரிச்சம் பழகத்தை சாப்பிட்டு வரலாம்.

எலும்பு பிரச்சனை

பேரிச்சம் பழத்தில் உள்ள குறிப்பிட்ட கனிமச்சத்துக்கள், எலும்புகளுக்கு நல்லது மட்டுமின்றி வலிமையாக்கி, ஆஸ்டியோபோசிஸ் போன்ற எலும்பு பிரச்சனைகளால் ஏற்படும் வலியை எதிர்த்துவிடும். இதனால், தினமும் காலையில் 5 பேரிச்சம் பழகத்தை சாப்பிட்டு வரலாம்.