இந்த சட்னியை வாரம் 3 முறை செய்து சாப்பீட்டீங்கன்னா ஆஸ்துமா சீக்கிரம் சரியாகிவிடுமாம்!
தூதுவளை எல்லா இடங்களிலும் வளரும் ஒரு காயகற்ப மூலிகை வகையை சேர்ந்த ஒரு கீரையாகும். இது சித்த மருத்துவத்தில் அதிகமாக பயன்படுகிறது. தூதுவளைக்கு சிங்கவல்லி, அளர்க்கம், தூதுளை, தூதுளம் என்ற பெயர்களும் உண்டு. இது மரங்களை பற்றியபடி வளரும் கொடி வகையை சேர்ந்த ஒரு தாவரமாகும். இதன் இலைகளில் சிறு முட்கள் காணப்படும். தூதுவளையின் இல்லை, இலை, பூ, காய், வேர் என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது.
ஆஸ்துமாவை குணப்படுத்தும் சக்தி தூதுவளைக்கு உள்ளது. வாரம் 3 முறை இப்படி தூதுவளை சட்னி செய்து சாப்பிட்டீர்கள் என்றால் உடல் ஆரோக்கியம் பெரும்.
தூதுவளை சட்னி செய்வது எப்படி என்று பார்ப்போம் -
தேவையான பொருட்கள் :
தூதுவளை கீரை - ஒரு கப்,
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்,
மிளகு - ஒரு டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிட்டிகை,
புளி - சிறிதளவு,
நெய், உப்பு - தேவைக்கு.
செய்முறை :
வாணலியில் நெய் விட்டு உளுந்தம் பருப்பு, மிளகு, சீரகம் சேர்த்து வறுத்து எடுக்க வேண்டும்.
அதே நெய்யில் கீரையை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
வதக்கிய அனைத்தும் நன்கு ஆறிய பின் அனைத்தையும் ஒன்றாக கலந்து மிக்சியில் போட்டு உப்பு, புளி சேர்த்து விழுதாக அரைத்து எடுத்தால் சுவையான தூதுவளை சட்னி ரெடி.