நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவும் வெங்காயச் சட்னி - சுவையாக செய்வது எப்படி?
life-style-health
By Nandhini
வெங்காயத்தில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த வெங்காயத்தை பச்சையாக தினமும் சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. பல்வேறு காரணங்களால் உஷ்ணம் அதிகரிக்கும்போது வெங்காயம் உடல் உஷ்ணத்தைச் சமனப்படுத்துகிறது. நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு.
சுவையான வெங்காய சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் -
தேவையான பொருட்கள்
வெங்காயம்- கால் கிலோ,
காய்ந்த மிளகாய் -20,
புளி - சிறிதளவு,
எண்ணெய் - 2 ஸ்பூன்,
உப்பு- தேவையான அளவு.
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
- வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை நன்கு வதக்க வேண்டும்.
- பின்னர் அத்துடன் வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
- வெங்காய கலவை நன்கு வதங்கியவுடன் புளி சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, போட்டு தாளித்து, அதில் அரைத்து வைத்த வெங்காய கலவையை சேர்த்தால் சுவையான வெங்காய கார சட்னி தயார்.
- இது இட்லி, தோசை, இடியாப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.