மாம்பழம் சாப்பிட்ட பிறகு தப்பித்தவறி இதை செய்துவிடாதீங்க.. இல்லைன்னா.. இந்த பக்கவிளைவு ஏற்படுமாம்!
பழங்களின் ராஜா, முக்கனிகளில் ஒன்று என பல சிறப்புகளைக் கொண்டது மாம்பழம். ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையில் மட்டுமே கிடைக்கக்கூடிய சீசன் பழ வகைகளில் ஒன்று இந்த மாம்பழம்.
மாம்பழம் நாவில் நீர் ஊறவைக்கும் சுவை கொண்டது மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல அருமையான குணங்களைக் கொண்டதும் கூட. மாம்பழத்தில் பூரிதக் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியத்தின் அளவு மிகவும் குறைந்தே காணப்படுகிறது.
இதில் மேலும் முக்கியமாக நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி-யும் அதிகம் உள்ளது. பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் காப்பர் போன்ற கனிமங்களும் இதில் வளமாகக் காணப்படுகிறது. ஆனால், மாம்பழம் சாப்பிட்டவுடன் சில உணவுகளை உட்கொண்டால் பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
[
அந்த வகையில், மாம்பழம் சாப்பிட்ட பிறகு தவிர்க்க வேண்டியவை -
- தயிர் சாதம் சாப்பிடும் போது மாம்பழத்தை தவிர்த்து விட வேண்டும். உடலுக்கு சூட்டை தரும் மாம்பழத்துடன், குளிர்ச்சியை தரும் தயிரை எடுத்துக்கொண்டால், தோல் பிரச்சனைகள், உடலில் நச்சுகள் சேருதல், ஆகியவற்றுக்கு வழிவகுத்து விடும்.
- மாம்பழம் சாப்பிட்ட உடனேயே கசப்பான உணவுகளை சாப்பிடக்கூடாது. இது குமட்டல், வாந்தி மற்றும் சுவாசிப்பதில் சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுமாம்.
- மாம்பழம் சாப்பிட்ட பிறகு காரமான உணவு அல்லது மிளகாய் அதிகம் உள்ள உணவை சாப்பிடுவது வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். எனவே மாம்பழம் சாப்பிட்ட பிறகு காரமான உணவுகளை தவிர்த்திடுங்கள்.
- மாம்பழத்தை சாப்பிட்ட உடனேயே தண்ணீர் அருந்தும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் அதை உடனே நிறுத்திவிடுங்கள். ஏனென்றால் இது உங்களுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி விடும். மேலும் வயிற்று வலி, அமிலத்தன்மை ஆகியவை ஏற்படுத்திவிடும். எனவே மாம்பழம் சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பது நல்லது.
- மாம்பழம் சாப்பிடும் போது குளிர்பானங்களை அருந்துவது இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து விடும்.