துருப்பிடித்த கறையை 5 நிமிடத்தில் போக்க... இதை ட்ரை பண்ணி பாருங்க... அசந்துடுவீங்க!

life-style-health
By Nandhini Jul 22, 2021 05:36 AM GMT
Report

நாம் தினந்தோறும் பல் துலக்க பயன்படுத்தும் டூத் பேஸ்டை கொண்டு எந்தெந்த பொருட்களையெல்லாம் 5 நிமிடத்தில் சுத்தப்படுத்தலாம் என்று பார்ப்போம்.

வெள்ளி நகைகள்

வெள்ளி பாத்திரங்கள், ஆபரணங்கள் பளிச்சிட ஒரு மெல்லிய காட்டன் துணியில் டூத் பேஸ்ட் தடவிக் கொள்ள வேண்டும். பின்னர், மெதுவாக பாலீஷ் செய்வது போல் தேய்த்தால் புதிதுபோல் ஆபரணங்கள் பளபளக்கம். இது வைர நகைகளுக்கும் பொருந்தும்.

அயர்ன் பாக்ஸ்

வீடுகளில் இஸ்திரி பெட்டி உபயோகிக்கும்போது நாளடைவில் அவை துரு பிடித்து விடும். இது ஒருவித கருமை நிற கோட்டிங் படிந்துள்ளது போல் இருக்கும். டூத் பேஸ் கொண்டு நன்கு தேய்த்தால், டூத் பேஸ்டில் உள்ள சிலிக்கா இந்த துரு கறைகளை நீக்கிவிடும்.

துணிகள்

துணிகளிலும், கார்பெட்களிலும் படிந்த கனமான கறைகளை டூத் பேஸ்ட் மூலம் இஸியாக நீக்கி விடலாம். டூத் பேஸ்ட்டை கறை படிந்த இடங்களில் தடவி நன்றாக தேய்த்தால் கறைகள் நீங்கி விடும்.

வீட்டுச் சுவர்

குழந்தைகள், வீட்டுச் சுவர்களில் கிரேயான் கொண்டு கோடுகள் கிறுக்குவது, சகஜம். ஈரத்துணியில் பேஸ்ட் தடவி, கிரேயான் கோடுகளின் மீது தேய்த்தால் இந்த கறைகளெல்லாம் மறைந்துவிடும்.

மூக்கு கண்ணாடி

மூக்கு கண்ணாடியை துடைக்க நமது மூக்கு கண்ணாடியை துடைப்பதற்கு டூத் பேஸ்டை விட சிறந்தது ஒன்றும் கிடையாது. சிறிது பேஸ்ட் தடவி நன்றாக கழுவினால் மூக்கு கண்ணாடிகள் பளிச்சென்று மாறிவிடும்.

துருப்பிடித்த கறையை 5 நிமிடத்தில் போக்க... இதை ட்ரை பண்ணி பாருங்க... அசந்துடுவீங்க! | Life Style Health