ரத்தத்தை சுத்தப்படுத்தும் புளிச்சக்கீரை தொக்கு! இந்த மாதிரி சுவையாக செய்து பாருங்க...
life-style-health
By Nandhini
புளிச்சகீரையானது பெயருக்கு தகுந்தாற்போல் மிக அதிக புளிப்பு சுவையுடையது. ஆந்திராவில் இந்த கீரையின் பயன்பாடு மிகவும் அதிகம். ஆந்திராவில் இந்த கீரையை ‘கோங்குரா’ என அழைக்கிறார்கள்.
புளிச்சகீரைக்கு புளிச்சிறுகீரை, காசினிக்கீரை, காயச்சுரை, கைச்சிரங்கு, காய்ச்சகீரை, சனம்பு என பல பெயர்கள் உண்டு. காசநோயை குணமாக்கும் இந்த கீரை ரத்தத்தை சுத்தப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் உஷ்ணத்தை எப்போதும் சீராக வைத்திருக்க உதவுகிறது.
அதனால்தான் இந்தகீரையை உடலுக்கும், குடலுக்கும் வளமூட்டும் கீரை என்பார்கள்.
ரத்தத்தை சுத்தப்படுத்த புளிச்சகீரை தொக்கு எப்படி செய்யலாம் என்று பார்ப்போம் -
தேவையான பொருட்கள் :
- கோங்குரா (புளிச்ச கீரை) - 2 கட்டு
- கடலைப்பருப்பு - ஒரு மேஜைக்கரண்டி
- வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 20
- புளி - தேவைக்குஏற்ப
- சீரகம் - ஒரு தேக்கரண்டி
- நல்லெண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- கோங்குரா (புளிச்ச கீரை) இலைகளை மட்டும் கிள்ளி நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு கடலை பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்துப் பொன்னிறமாக வறுத்தெடுக்க வேண்டும்.
- இதை ஆறவைத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.
- மீண்டும் வாணலியில் எண்ணெய் விட்டு கோங்குராவை நன்கு சுருண்டு வரும் பதம் வரை வதக்க வேண்டும்.
- கோங்குரா ஆறியதும் புளியுடன் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்ற வேண்டும். (புளிப்பு சுவை வேண்டாம் என்பவர்கள் புளியை போட வேண்டாம். ஏனென்றால் புளிச்ச கீரையிலேயே புளித்தன்மை இருக்கும்).
- மிக்ஸியில் கீரையுடன் இறுதியாகப் பொடித்து வைத்துள்ளவற்றைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்க வேண்டும்.
-
சாதம், சப்பாத்தி என்று எல்லாவற்றுடனும் இந்தத் தொக்கு சுவையாக இருக்கும்.