இஞ்சியை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் இந்த பக்கவிளைவுகளெல்லாம் ஏற்படுமாம்!

life-style-health
1 வருடம் முன்

இஞ்சி பழங்காலத்தில் இருந்தே உணவு மற்றும் மருந்துக்காக மிக அதிக அளவில் மக்களால் உபயோகபடுத்தபடுகிறது. பழங்காலத்தில் இருந்த பாரம்பரிய மருத்துவ முறையில் 50% மருந்துகள் இஞ்சியையே மூலப்பொருளாக கொண்டிருந்ததாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இஞ்சி உணவின் ருசி மற்றும் மணம் கருதி, அனைத்து வகையான உணவுகளிலும் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண பொருளாகும். பழைய மருத்துவ குறிப்புகளைப் பார்த்தால், இஞ்சி பச்சையாகவும், காயவைத்தும் மருத்துவமுறைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கி.மு 4ஆம் நூற்றாண்டு சீன நாட்டு மருத்துவ குறிப்புகளின்படி இஞ்சி வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கும், சுவாசப் பிரச்சனைகளுக்கும், வயிற்றுப்போக்கு, காலரா, பல் வலி, ரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருந்துள்ளது. ஆனால், எதுவுமே அளவாக இருந்தால் நல்லது. அதுவே அளவுக்கு மீறி அதிகமாக நாம் சாப்பிட்டால் நஞ்சாகிவிடும்.

இஞ்சியை அதிகளவில் சாப்பிட்டால் ஏற்படும் பாதிப்பைப் பற்றி பார்ப்போம் -

செரிமானப் பிரச்சினைக்கு

இஞ்சி செரிமானத்திற்கு நல்லது என்றாலும் அதிக அளவில் இஞ்சியை எடுத்துக் கொண்டால், செரிமான அமைப்பை பாதித்து செரிமானக் கோளாறை உண்டாக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு

இஞ்சி நீரிழிவு நோய்க்கு நல்லதுதான். ஆனால் அதற்கான மாத்திரைகளை உட்கொண்டு வருவோர் இஞ்சி சாப்பிட்டால் பக்கவிளைவுகளை உண்டாக்கி விடும்.

வயிற்று வலி

இஞ்சியை அதிகமாக குடிப்பதால், அது அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்து, நெஞ்செரிச்சல், வயிற்று வலி பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

கர்ப்பிணிகள்

பலவீனமான கர்ப்பிணிகள் மற்றும் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இஞ்சி டீயை அதிகமாக எடுத்துக் கொண்டால், அது உதிரப்போக்கை ஏற்படுத்தும்.

பித்தப்பைக் கல், குடல் பிரச்னை இருப்பவர்கள்

பித்த நீர் சுரப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால், பித்தப்பையில் கல் இருப்பவர்கள் இஞ்சியை அதிகளவில் சாப்பிட கூடாது. முழுதாக இஞ்சியை நசுக்காமல் சேர்த்துக்கொள்வது, குடலில் அடைப்பை ஏற்படுத்திவிடும். அதனால் அல்சர் இருப்பவர்கள், இஞ்சியை அதிகளவில் எடுத்துக்கக்கூடாது.         

இஞ்சியை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் இந்த பக்கவிளைவுகளெல்லாம் ஏற்படுமாம்! | Life Style Health

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.