உடல் வெப்பத்தை தணித்து, உடல் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கேழ்வரகு கூழ்!
life-style-health
By Nandhini
பொதுவாக உடலின் வெப்பம் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. உடல் வெப்பத்தின் அளவு அதிகரித்தாலோ குறைந்தாலோ நமது உடலில் ஏதாவது பிரச்சினை ஏற்படும். உடல் வெப்பத்தை தணிக்க கேழ்வரகு கூழ் உதவி செய்கிறது. வாரத்திற்கு இரண்டு முறை கேழ்வரகு கூழ் குடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
தற்போது கேழ்வரகு கூழ் செய்வது எப்படி என்று பார்ப்போம் -
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு-1 கோப்பை
பச்சரிசி-கால் கோப்பை
தண்ணீர்- 2 கோப்பை
தயிர்-1 கோப்பை
சின்ன வெங்காயம்-2
தேக்கரண்டி அளவு பொடியாக நறுக்கியது பச்சை மிளகாய்-1
உப்பு - தேவையான அளவு
செய்முறை
- ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்த கேழ்வரகு மாவை போட வேண்டும்.
- பிறகு 4 கோப்பை நீரை அந்த பாத்திரத்தில் ஊற்றி கேழ்வரகு மாவு கட்டி போகாதவாறு நன்கு கலக்க வேண்டும்.
- கால் கோப்பை பச்சரிசியை எடுத்துக்கொண்டு மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இந்த அரிசி மாவை மற்றொரு பெரிய பாத்திரத்தில் போட்டுகொண்டு, அதில் 2 கோப்பை நீரை ஊற்றி, அடுப்பில் தீமூட்டி கொதிக்க வைக்கவும்.
- இந்த பச்சரிசி மாவு நன்கு கஞ்சி போன்ற பதத்தில் வந்தவுடன், அதில் கேழ்வரகு மாவு கலவையை ஊற்ற வேண்டும்.
- பின்னர் தேவையான அளவு உப்பை சேர்த்து, இளம் சூட்டில் இந்த கேழ்வரகு மற்றும் பச்சரிசி மாவு கலவை கட்டி போகாதவாறு கரண்டியை கொண்டு கலக்கி கொண்டே இருக்க வேண்டும்.
- அதிக சூட்டில் வைத்து இந்த கலவையை கலக்கினால் இந்த கூழ் மிகவும் இறுகி களி ஆகிவிடும்.
- பதத்தில் கூழ் வந்தவுடன் உடனடியாக பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும்.
- உடனடியாக தயிரை இக்கலவையில் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
- பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் போன்றவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இக்கூழில் போட்டு கலக்கிய பின் கூழ் உண்பதற்கு தயாராகிவிடும்.
- இந்த கூழை சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் கொடுப்பதுடன், உடல் சூட்டையும் தணித்து விடும்.