காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்ன்னு தெரியுமா?

life-style-health
By Nandhini Jul 19, 2021 12:17 PM GMT
Report

தண்ணீர் மிகவும் சிறப்பான பானமாகும். தண்ணீரானது தாகத்தை தணிப்பதோடு, உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரக்கூடியதும் கூட.

காலையில் முகத்தை கழுவியதும் பற்களை துலக்காமல், வெறும் வயிற்றில் தண்ணீரை குடித்துவிட்டு 1 மணி நேரம் எதுவுமே சாப்பிடக் கூடாது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் இந்த முறையானது ஜப்பான் மக்களிடம் இருந்து நடைமுறைக்கு வந்தது. இதை தான் “வாட்டர் தெரபி” என்கின்றனர்.

நம் உடல் 70% தண்ணீரினால் ஆனது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளின் சீரான செயல்பாட்டிற்கு தண்ணீர் குடிப்பது அவசியமாகிறது. அதுவும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் அதிகம்.

உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லாவிட்டால் உடலில் நீரிழப்பு (dehydration) ஏற்படும். இதன் காரணமாக நாவறட்சி, உடல் களைப்பு, தலைவலி மற்றும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பதால் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்ன்னு தெரியுமா? | Life Style Health

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம் -

நச்சுக்களை வெளியேற்றிவிடும்

தண்ணீரானது உடலின் மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். இதனால் உடலானது நச்சுக்களின்றி சுத்தமாக இருக்கும்.

பசியைத் தூண்டும்

தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும்.

தலைவலியை தடுக்க

பெரும்பாலானோருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதால் தலைவலி அடிக்கடி ஏற்படும். அத்தகையவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து, தலைவலியானது குறையும்.

உடல் எடையை குறைக்க 

எடையை குறைக்க நினைப்பவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதால் தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.

பொலிவான சருமத்திற்கு

குடலானது சுத்தமாக இல்லாவிட்டால், முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். இப்படி பருக்கள் வந்தால் சருமமானது அழகை இழந்துவிடும். எனவே தினமும் தண்ணீரைக் குடித்து வந்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, முகம் பருக்களின்றி பொலிவோடு இருக்கும்.