கண்கட்டி உங்களை பாடாய் படுத்துகிறதா? இதோ பாட்டி வைத்தியம்!

life-style-health
By Nandhini Jul 19, 2021 11:55 AM GMT
Report

கண் இமைகளில் அடிக்கடி தோன்றுவது கட்டிகள். இவை இமைப்பகுதியில் உள்ள சுரப்பிகளில் ஏற்படும் அடைப்புகளின் காரணமாக உருவாகிறது. திரவங்கள் தேங்கி, கிருமிகள் தாக்கி இப்பகுதியில் சீழ் பிடிக்கிறது.

இமை முடிகள் முளைக்கும் இடங்களில் உள்ள ஜீஸ் கிளேண்ட் எனும் சுரப்பியில் ஏற்படுவது வெளிக்கட்டி ஆகும். இதுவே கண் இமையின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மெய்போமியன் கிளாண்ட்ஸில் ஏற்பட்டால் அது உள்கட்டி எனப்படுகிறது.

வெளிக்கட்டியில் அதிக வலி ஏற்படும். உள் கட்டியோ நாள்பட்ட கட்டியாக இருப்பதால் வலி குறைவாக இருக்கும். இதற்கு சிலர் சுயமாக வைத்தியம் செய்ய முயற்சிப்பது வழக்கம். கண்களைப் பொறுத்தவரை எந்தப் பிரச்னையாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கண்களை மூடுவதில் சிரமம் ஏற்படும். கண்கட்டி, பூச்சிக்கடி, எறும்புக்கடி, கண்நீர்ப்பைக் கட்டி போன்ற காரணங்கள் மற்றும் சளி, சைனஸ் போன்ற உடல் நோய்கள், சிறுநீரகம், இதய நோய்களாலும், உடலில் ஏற்படும் ஒவ்வாமையின் காரணமாகவும் கண் இமைகளில் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

கண் வலி, கண்மை அலர்ஜி, கண் சொட்டுமருந்து அலர்ஜி ஆகியவற்றாலும் இமையில் வீக்கம் ஏற்படும். கண் இமை ஓரங்களில் அரிப்பு ஏற்படுதல், இமை முடிகள் கொட்டிப் போதல், தூங்கும்போது பூளை கட்டுதல், இமை ஓரங்கள் தடித்து வீங்குதல் போன்ற பிரச்னைகள் கிருமித் தொற்றால் ஏற்படும். இமை முடிகளில் தலையில் உள்ள பொடுகு போல் ஒட்டிக் கொண்டு அரிப்பை ஏற்படுத்தும்.

இது போன்ற பிரச்சினை உள்ளவர்கள் தினமும் இரண்டு வேளை காலையில் குளிப்பதற்கு முன்பாகவும், இரவு தூங்குவதற்கு முன்பாகவும் இமைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். மருத்துவர் ஆலோசனைப்படி களிம்பு பயன்படுத்தி இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். .

கண் கட்டி என்றால் என்ன?

கண் கட்டி என்பது ஒரு வலிமிகுந்த கண் நிலை, இது மேல் அல்லது கீழ் கண் இமைகளின் விளிம்பில் ஒரு சிவப்பு கட்டியை ஏற்படுத்துகிறது. இது ஒரு பரு அல்லது கொதிப்பு போல் தோன்றலாம் மற்றும் பெரும்பாலும் சீழ் நிரம்பியிருக்கும் மற்றும் இது கண் இமைகளில் எண்ணெய் சுரப்பிகளின் தொற்று காரணமாக ஏற்படுகிறது.

காரணம் என்ன?

இதற்கு உடலில் அதிகப்படியான சூடு, நீர் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைவு. சுகாதாரம் இல்லாமல் இருப்பது பல காரணங்கள் இவ்வாறு கண்கட்டி உருவாவத்ற்கு காரணம். தொற்றினாலும் உண்டாகும். சிலருக்கு அதில் நீர் கசிந்துகொண்டேயிருக்கும்.

அறிகுறிகள்:

ஒரு பரு போன்ற, கண்ணிமை மீது சீழ் நிறைந்த சிவப்பு கட்டி கண் இமைகளில் வலி கண்ணில் வீக்கம் நீர் கலந்த கண்கள்

தனியா விதை

தனியா விதை கைப்பிடி எடுத்து 20 மி.லி நீரில் 20 நிமிடங்கள் கொதிக்கவிடுங்கள். பின் வெதுவெதுப்பாகியதும் வடிகட்டி , அந்த நீரினால் கண்களை கழுவலாம். தினமும் 3 முறை செய்து பார்த்தால் பலன் தெரியும்.

கொய்யா இலை

கொய்யா இலையை லேசாக சூடுபடுத்துங்கள் அதனை ஒரு மெல்லிய துணியினால் மூடி கண்களின் மேல் ஒத்தடம் கொடுங்கள். உருளைக் கிழங்கு தோல் : பலரால் உருளைக் கிழங்கு தோலை சீவி அதனை கண்கள் மீது 10 நிமிடங்கள் வைக்கவும். நல்ல பலன் தெரியும்.

முருங்கைக் கீரை

முருங்கைக் கீரையை அரைத்து அடிக்கடி தலையில் தேய்த்துக் குளித்து வந்தால், உடல் குளிர்ச்சி அடைவதுடன் கண்கட்டி வராமலும் தடுக்கலாம்.

அகத்திக் கீரை

அகத்திக் கீரை சாற்றுடன் துவரம் பருப்பு மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து வேகவைத்து சாப்பிட்டால் கண் எரிச்சல் வராது. அகத்திக் கீரையை அரைத்து அதை தலையின் உச்சியில் ஒரு மணி நேரம் ஊறவைத்து குளித்தால் உடல் சூடு குறையும்.