பூண்டு எண்ணெய்யோடு இந்த எண்ணெய்யை கலந்து பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகள் ஏராளாமாம்?

life-style-health
By Nandhini Jul 19, 2021 10:48 AM GMT
Report

உடலில் காயம், வலி என ஏதாவது ஏற்பட்டால் பொதுவாக எல்லோர் வீட்டிலும் பரிந்துரைக்கப்படுவது தேங்காய் எண்ணெய் தான். ஆனால் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற இயற்கை எண்ணெய்கள் மட்டுமில்லாமல் வேறு சில இயற்கை எண்ணெய்களும்  உடலில் பல நன்மைகளை வழங்கும்.

உணவில் பூண்டினை வறுத்தோ, நறுக்கியோ, நசுக்கியோ, அரைத்தோ, பாதியாகவோ அல்லது முழுதாகவோ சேர்த்தால், சுவை குறைந்த உணவும் கூட அட்டகாசமானதாகி விடும்; அப்படி பல சிறப்புகள் வாய்ந்தது தான் பூண்டு எண்ணெய்.

இந்த பூண்டு எண்ணெய்க்கு பல மருத்துவ குணங்கள் உண்டு. காதுகளில் ஏற்படும் பூஞ்சை தோற்று, முகப்பரு, மூட்டு வலி, தவைமுடி உதிர்வு போன்ற பல பிரச்சனைகளை தீர்க்க கூடிய அளவிற்கு பூண்டு எண்ணெயில் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.

பூண்டு எண்ணெய்யோடு இந்த எண்ணெய்யை கலந்து பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகள் ஏராளாமாம்? | Life Style Health

தேங்காய் எண்ணெய்யுடன் பூண்டு எண்ணையை சேர்த்து பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம் -

தலைமுடி உதிர்வதை தடுக்க:

பூண்டு எண்ணெய் தலைமுடி உதிர்வதை தடுக்க வல்லது. மேலும் முடி வேகமாக வளர உதவி செய்யும். பூண்டு மற்றும் தேங்காய் எண்ணெய் கூந்தல் ஆரோக்கியத்திற்கு நன்மைகளை வாரி வழங்குகிறது. பூண்டுடன் இணைந்து தேங்காய் எண்ணெய், முடி உதிர்வை எதிர்த்து போராடும். இரண்டு பல் பூண்டை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய் எண்ணெய்யை மிதமாக சூடாக்கி, அதில் பூண்டைச் சேர்க்கவும். இந்த கலவையை உங்கள் தலையில் நன்றாக மசாஜ் செய்து தடவ வேண்டும். அரை மணி நேரம் இந்த எண்ணெய் உங்கள் தலையில் ஊறியவுடன், வழக்கமான ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலச வேண்டும்.

காதில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றுக்கு

காதுகளில் ஏற்படும் தொற்றுகளுக்கு தேங்காய் எண்ணெய்யுடன் பூண்டு எண்ணெயைச் சேர்த்து கலந்து காதில் தடவி வந்தால் காதில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றை தடுக்கலாம்.

மூட்டு வலிக்கு:

பூண்டு எண்ணெய் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் தர வல்லது. ஒரு கப்பில் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொண்டு, அதில் பத்து துளி பூண்டு எண்ணெயை விட்டு கலந்து மூட்டு வலி இருக்கும் இடத்தில் தடவிக் கொண்டு வந்தால், இது வீக்கத்தை குறைத்து வலியில் இருந்து நிவாரணம் கொடுக்கும்.