வெறும் வயிற்றில் தினமும் மாதுளைச்சாறு குடித்து வந்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

life-style-health
By Nandhini Jul 16, 2021 01:32 PM GMT
Report

மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. மாதுளையில் நம் கண்ணுக்கு தெரியாத பல அதிசயங்கள் அடங்கியுள்ளன.ஆமாங்க மாதுளையின் பழம் ,பூ ,தோல் என மாதுளையில் ஒவ்வரு பகுதிகளும் பல மருத்துவக்குணங்கள் உள்ளன.

மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன.

ஆண் தன்மையில் பலவீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது. அது மட்டுமல்லால் தலைமுடியின் வளர்ச்சி மற்றும் சருமத்தின் பயன்கள் அதிகம் உள்ளன. 

தினமும் மாதுளைச்சாறு குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம் - 

வெறும் வயிற்றில் தினமும் மாதுளைச்சாறு குடித்து வந்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா? | Life Style Health

சர்க்கரை நோய்க்கு

தினமும் மாதுளைப்பழ ஜூஸைக் குடித்தால், அது இரத்த சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, டைப்-2 சர்க்கரை நோயின் அறிகுறிகளையும் தடுக்கும்.

தலைமுடி வளர்ச்சிக்கு

மாதுளை ஜூஸைக் குடித்தால், அது அடர்த்தியான மற்றும் ஆரோக்கியமான தலைமுடிக்கு உதவும். இந்த ஜூஸை தலைமுடி அதிகம் உதிரும் பிரச்சனை உள்ளவர்கள் குடித்து வந்தால், இது மயிர்கால்களை வலிமையாக்கி, தலைமுடி உதிர்வதைத் தடுக்கும். மேலும் இந்த ஜூஸ் தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

ஆரோக்கியமான இதயம்

மாதுளை ஜூஸ் இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கும். இது இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும். மாதுளை ஜூஸைக் குடித்து வந்தால், அது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பைத் தடுப்பதோடு சரிசெய்யும். இரும்புச்சத்து மாதுளம் பழத்தில் அதிக பயன்கள் உள்ளது. மாதுளையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. தினமும் மாதுளை சாறு குடிப்பதால் உடலில் இரும்புச்சத்து அளவு அதிகரிக்கிறது.

வறட்டு இருமல்

மாதுளம்பழச் சாறுடன் இஞ்சிச் சாறை சம அளவு எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால் நாள்பட்ட வறட்டு இருமல் ஓடிவிடும்.

மாதவிடாய் பிரச்சனை

மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் குடித்து வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சனை நீங்கும்.

நினைவாற்றல்

மாதுளை ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால் நினைவாற்றல் பெருகும்.