உடல் சூட்டால் அவதியா? கவலை வேண்டாம்... இதைப் பின்பற்றினாலே போதும்... உடல் சூடு தணிந்துவிடும்!
உடல் சூடு என்பது நம்முடைய உடல் இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. நம்முடைய உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சீராக இயங்குவதற்கும், ஜீரண வேலைகள் நிகழ்வதற்கும் முக்கிய சக்தியாக உடல் வெப்பம் இருக்கிறது.
உடல் உஷ்ணத்தால் ஏற்படும் நோய்கள்
உடற்சூடு அதிகமானால் நமக்கு கண் எரிச்சல், தூக்கமின்மை, வாய்ப்புண் போன்ற சாதாரண சில அறிகுறிகள் தென்படும்.
முகப்பரு, தலை முடி உதிர்தல், வயிற்றுவலி, தோல் வியாதிகள் மற்றும் உடல் எடை குறைதல் போன்றவை ஏற்படும். ஆரம்பத்திலேயே நாம் அதை கவனித்து சரி செய்து கொள்ள வேண்டும்.
உடல் சூடு ஏற்பட காரணம்
இறுக்கமான ஆடை, ஜுரம், தைராய்டு சுரப்பி அளவுக்கு அதிகமாக வேலை செய்தல், கடும் உழைப்பு, சில மருந்துகள், நரம்புக் கோளாறுகள் ஆகியவை உடல் சூடு ஏற்பட காரணமாக அமைந்துவிடுகின்றன.
உடல் சூடு தணிக்க இயற்கை வழிகள் உள்ளது. அவற்றை கடைப்பிடித்தால் உடல் சூட்டை தணித்து விடலாம்.
- உடல் சூடு தணிக்க இளநீர் குடித்து வரலாம்.
- உடல் சூடு தணிக்க கார, மசாலா ஆகிய உணவுகளைத் தவிர்த்து விட வேண்டும்.
- பொரித்த, கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது சிறந்தது. உப்பு குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
- வாழைப்பழம், வெள்ளரி, கரும்புச்சாறு மூன்று நன்றாக சாப்பிட்டு வர வேண்டும்.
- வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை அருந்து வரலாம்.
- சந்தனம், பன்னீர் கலந்து உடலில் தடவலாம். நிறைய பழங்களை சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.
- மோர் தினமும் குடித்தால் உடல் சூடு தணியும். வைட்டமின் `சி’ சத்தும் கொண்ட தர்பூசணி பழம் உடல் சூட்டினை நன்கு தணிக்கும்.
- புதினா சாறு, மோருடன் கலந்து பருகுவது உடனே சூடு தணியும்.
- சோம்பு ஊற வைத்த நீர் உடலுக்கும், குடலுக்கும் நன்மை பயக்கும்.
- பாதாம் பிஸின் சிறிது, இரவில் நீரில் ஊற வைத்து காலை பாலுடன் கலந்து பருக சூடு தணியும்.
- நனைத்த பருத்தி ஆடையினை உடலில் 15-20 நிமிடம் சுற்றி இருக்க உடலில் சூடு தணியும்.
- சாதாரண நீர் குடிப்பது உடலை குளிரச் செய்யும்.
- துளசி விதைகளை நீரில் ஊறச் செய்து குடிப்பது, உடல் சூட்டைத் தணிக்கும்.
- தேங்காய் எண்ணை உடலில் தேய்த்துக் குளிக்க சூடு தணியும்.
- மனதினை அமைதியாய் வைத்திருப்பதும், யோகா செய்வதும் உடல் சூட்டினைத் தணிக்கும்.
-
தினம் ஒரு நெல்லி சாற்றினை அருந்தலாம்.
தினமும் ஒரு எலுமிச்சை சாறு அருந்தலாம்.