3 அடியில் வளரும் வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்!
வெந்தயக் கீரைகள் இரும்புச்சத்துப் பொருட்களை அதிக அளவில் கொண்டு உள்ளன. இரும்புச் சத்துப் பொருட்கள் உடலில் ஏற்படும் ரத்தசோகை வராமல் தடுப்பதோடு உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன.
வெந்தயக்கீரை சுமார் 3 அடி உயரம் வளரும். வீட்டுத் தோட்டத்திலும் தொட்டியிலும் இதை மிக எளிதாக வளர்க்க முடியும். வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன.
வெந்தயம் கீரை மற்றும் வெந்தயம் உணவுப்பொருளாகவும், மருத்துவ பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெந்தயம் தமிழர்களின் சமையலில் தவறாமல் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருளாகும்.
இதன் செடி கீரையாகவும், இதன் விதைகளான வெந்தயம் உணவுகளில் சுவையூட்டியாகவும் வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றிற்கான மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெந்தயக் கீரையை பல்வேறு முறைகளில் சமைத்து உண்ணலாம்.
வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம் -
நீரிழிவு நோய்க்கு
வெந்தயக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது.
கண் பார்வைக்கு
உடல் சோர்வாக உள்ளவர்கள் வெந்தயக்கீரை சாப்பிட்டால் விரைவாக குணமடையலாம். வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை அதிகரிக்கும்.
நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு
நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு வெந்தயக் கீரை ஓர் சிறந்த மருந்தாகும். இது நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவர சீரிய முறையில் உதவும்.
வயிற்று வலி
உப்புசமாக உணர்தல் வயிற்று எரிச்சல் போன்ற வயிறு சார்ந்த கோளாறுகள் குணமாக வெந்தயக் கீரை உதவும்..
உடல் சூடுக்கு
உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிடலாம். இதன் குளிர்ச்சி தன்மை உடல் சூட்டை குறைந்து குளிர்ச்சியாக உணர உதவும். வெந்தயக் கீரையை உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொள்வதால் தலை சுற்றல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வுக் காணலாம் என்று கூறப்படுகிறது.
தொண்டைப் புண்
வெந்தயக் கீரையை அரைத்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப் புண், வாய்ப்புண் ஆறும்.
மார்பு வலி
வெந்தயக் கீரையுடன் சீமைப்புள், அத்திப்பழம், திராட்சை ஆகியவை சேர்த்துக் கஷாயமிட்டு தேன் கலந்து சாப்பிட்டால் மார்பு வலி, மூக்கடைப்பு போன்ற நோய்கள் தீரும்.
வயிற்றுக்கு கட்டி
வெந்தயக் கீரையை உண்டு வந்தால் சிறுநீர் சம்பந்தப்ட்ட கோளாறுகள் தீரும். நரம்புகளை பலப்படுத்தும். வயிற்றுக்கு கட்டி, உடல் வீக்கம், சீத பேதி, குத்திருமல், வயிற்று வலி போன்ற அனைத்தும் குணமாகும்.