சாப்பிட்டவுடன் தப்பித்தவறிகூட இதையெல்லாம் செய்யாதீங்க... இல்லன்னா... இந்த ஆபத்து உங்களுக்குத்தான்!
பசிக்கும்போது மட்டுமே சாப்பிட வேண்டும். சாப்பிடும் நேரம் வந்துவிட்டது என்பதற்காக வலுக்கட்டாயமாக எதையும் சாப்பிடக் கூடாது. உணவை நொறுங்கக் கடித்து, மென்று சாப்பிட வேண்டும்.
‘கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரம்மாதம்’ அப்பிடி பாடிக்கொண்டு ரசித்து ருசித்து உணவு சாப்பிடுங்கள். உணவை விட சிறந்த மருந்து ஏது உண்டு.
ஆனால் அந்த உணவை சரியான முறையில் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்கின்றோமா என்பதுதான் முக்கியம். எவ்வாறு உணவை உண்பதற்கு என்று நியதிகள் உண்டோ அதே போலவே உணவை உண்ட பின் செய்யக் கூடாத விஷயங்கள் இருக்கின்றன.
அவை என்னவென்று பார்க்கலாம் வாங்க -
டீ குடித்தல்
சாப்பிடவுடன் டீ குடிக்கக்கூடாது. டீயில் தேயிலை அதிக அளவு அமிலங்களை உள்ளடக்கி இருக்கும். இதனால், உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து உணவு செரிப்பதை சிக்கலாக்கி விடும்.
புகைப்பிடித்தல்
உணவு சாப்பிட்டவுடன் புகைப்பிடிக்கக்கூடாது. ஒரு சிகரெட், 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு சமமாகும். இதனால் புற்றுநோய் மிக விரைவில் வர வாய்ப்பு அதிகமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குளித்தல்
சாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது. அப்படி சாப்பிட்டவுடன் குளித்தால், கை, கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் உணவு செரிக்க தேவைப்படும் ரத்த ஓட்டம் குறைந்து வயிற்றில் உள்ள உணவின் செரிமானத்தை குறைத்துவிடும்.
தண்ணீர்
சாப்பிட்டவுடன் தண்ணிரை வயிறுமுட்ட குடிக்க கூடாது. இதனால் ஜீரணநீர் நீர்ந்து போய் அஜிரணமாகும் பல நோய்கள்வர இது முக்கிய காரணமாக அமையும். சுமார் 40 நிமிடம் கழித்து தண்ணீர்தாகம் எடுக்கும் அப்போது குடிக்கவேண்டும்.
இடுப்பு பெல்ட்டை தளத்தல்
சாப்பிட்டவுடன் லேசாக இருக்கட்டுமே என இடுப்பில் உள்ள பெல்ட்டை இறக்கிவிடுவார்கள் அல்லது தளர்த்தி விடுவார்கள். இதனால் சாப்பிட்ட உணவு உடனடியாக குடலுக்கு சென்று விழுவதால் சரியானபடி வேலை செய்ய முடியாமல் செரிமானக் கோளாறு ஏற்படும்.
நொறுக்குத் தீனி
சாப்பிட்ட உணவு ஜீரணமாகாத நிலையில் வேறு உணவுகள் எதையும் உண்ணக்கூடாது. இவ்வாறு சாப்பிட்டால் ஏற்கனவே சாபிட்ட உணவு ஜீரணத்தை கடுமையாக பாதிக்கும். இதனால் சுகர் வர காரணமாக அமையும்.
படுத்தல்
சாப்பிட்டதும் படுத்து விடக்கூடாது. காரணம், குடல் தனது செயல்பட மிகவும் சிரமப்படும். ஜீரணம் முறையாக நடக்காது. குறைந்தது ஒரு மணிநேரம் கழித்தே உறங்க வேண்டும். இது மதியம் ஓய்வு எடுப்பவர்களுக்கும் பொருந்தும்.
குளிர்பானங்கள்
சாப்பிட்டவுடன் குளிர்பானங்கள், ஐஸ்கீரீம், ஐஸ்வாட்டர் இவைகளையும் குடிக்கக் கூடாது. காரணம், உணவு ஜீரணமாக நமது குடலில் வெப்பம் இருக்கவேண்டும். அந்த வெப்பத்தை இந்த குளிர்பானங்கள் இல்லாமல் செய்துவிடும்.
பழங்கள்
சாப்பிட்டு முடித்ததும் எந்த பழங்களையும் சாப்பிடக்கூடாது. காரணம், உணவின் ஜீரண நேரம் குறைந்தது 5 மணிநேரங்களாகும். இந்த வித்தியாசத்தால் நாம் சாபிட்ட பழம் வாயுவாக மாற்றம் பெரும். இதில் ஒரு பழத்துக்கு மட்டும் விதிவிலக்கு அது பேரீச்சம்பழம்.
அதிக வேலை
சாப்பிட்டதும் பரபரப்பாக இயங்குவதோ, நடப்பதோ பளுவானவற்றை தூக்துவதோ கூடாது. காரணம், அவ்வாறு செய்தால் உணவு கீழ்நோக்கி செல்லாமல் மேல் நோக்கி வரும். இதனால் நெஞ்சு எரிச்சல், வாயு தொல்லைகள் ஏற்படும்.