தினமும் எலுமிச்சை நீரை குடித்து வந்தால் நம் உடலுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

life-style-health
By Nandhini Jul 14, 2021 01:02 PM GMT
Report

எல்லா காலங்களிலும் மலிவாக கிடைக்கும் மருத்துவ குணம் நிறைந்த ஒரே கனி எலுமிச்சை பழமாகும். தலைமுடி பிரச்சனை,சரும பிரச்சனை போன்ற உடலின் பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளுக்கு பெரிதும் பயன்படுவது எலுமிச்சையின் தனிச்சிறப்பாகும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

எலுமிச்சையில் வைட்டமின் சி, வைட்டமின் பி, ரிபோஃப்ளேவின், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட் என உடலுக்குத் தேவையான பல்வேறு மூலக்கூறுகள் உள்ளன.

தினமும் எலுமிச்சை நீரை குடித்து வந்தால் நம் உடலுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா? | Life Style Health

அஜீரண கோளாறு நீங்க

தினமும் காலை எலுமிச்சை நீரில் உப்பு கலந்து பருகுவதால் நாவில் உள்ள எச்சில் சுரப்பிகள் தூண்டிவிடப்படும். இதனால் அஜீரண கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

உடல் எடை குறைய

எலுமிச்சை சாறை சேர்த்து கொள்ளவதன் முலம் உடல் எடை குறையும். எலுமிச்சையில் இருக்கக்கூடிய சத்துகள், நம் உடலில் சேருகின்ற டாக்சின்களை வெளியேற்றும். இது அதிகப்படியாக சேர்ந்தால் நம் உடல் மிகவும் சோர்வுற்று காணப்படும்.

செரிமானம்

தினமும் இரவு தூங்குவதற்கு முன்னால் எலுமிச்சை கலந்த நீரைக் குடிப்பதினால் உங்களின் செரிமானத்தை இது தூண்டுகிறது. வாய் துர்நாற்றம் வாய் துர்நாற்றம் இருப்பவர்கள் தொடர்ந்து எலுமிச்சை நீர் குடித்துவந்தால் துர்நாற்றம் நீங்கும்.

சிறுநீரக கற்களை தடுக்க

எலுமிச்சை நீர் சிறுநீரக கற்களை தடுக்கும். சிறுநீர் கற்களை தடுக்க செய்யும். சிறிய கற்களை உடைக்க கூடும் அல்லது வெளியேற்றவோ உதவும். ஏனெனில் எலுமிச்சையில் இருக்கும் சிட்ரேட் சிறுநீரை குறைந்த அமிலமாக்கி வெளியேற்றுகிறது.

இதய நோய்

தினமும் எலுமிச்சை நீரை குடித்து வந்தால் இதய நோய் அபாயத்தை குறைக்கலாம். எலுமிச்சை ரத்த அழுத்தத்தை குறைக்க செய்யும்.