வாயுத்தொல்லை, அஜீரண கோளாறுகளை போக்கும் பிரண்டை துவையல்! செய்வது எப்படி?

life-style-health
By Nandhini Jul 14, 2021 11:41 AM GMT
Report

பிரண்டை தண்டுகளை நன்கு பக்குவப்படுத்தி சாப்பிடும் போது உடலுக்கு சிறந்த பலத்தை தருகிறது. பிரண்டையில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் பல இருக்கிறது.

இதை வாரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல உற்சாகத்தையும், சுறுசுறுப்பு தன்மையையும் கொடுக்கிறது.

பிரண்டையின் சிறப்பு அம்சமே எலும்பு சார்ந்த பாதிப்புகளுக்கு சிறந்த நிவாரணமாக இருப்பது தான். எலும்பு தேய்மானம் பிரச்சனை கொண்டவர்கள் பிரண்டை ரசம் வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. வயிற்றில் வாயு கோளாறு ஏற்பட்டு அவதியுறுபவர்கள் வாரம் ஒருமுறை அல்லது இருமுறை பிரண்டை துவையலை சாப்பிட்டு வந்தால் வாயுத்தொல்லை, அஜீரண கோளாறுகள் போன்றவை நீங்கும். குடலில் தங்கியிருக்கும் அழுக்குகள் மற்றும் நச்சுக்களை நீக்கி சுத்தப்படுத்துகிறது.

பிரண்டை துவையல் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம் -

தேவையான பொருட்கள்:

பிரண்டை - 1 கட்டு

உளுத்தம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

பூண்டு - 10 பல்

இஞ்சி - 1 துண்டு

காய்ந்த மிளகாய் - 5 முதல் 6

தேங்காய் - 1 துண்டு

புளி - சிறிதளவு

நல்லெண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

பெருங்கயத்தூள் - கால் டேபிள்ஸ்பூன்

வாயுத்தொல்லை, அஜீரண கோளாறுகளை போக்கும் பிரண்டை துவையல்! செய்வது எப்படி? | Life Style Health

செய்முறை:

  • முதலில் பிரண்டையில் உள்ள மேல் தோலை நீக்கி விட வேண்டும். பின்னர் பிரண்டையை நன்றாக தண்ணீர் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • இதனையடுத்து, ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • எண்ணெய் சூடானதும் 2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பினை சேர்க்க வேண்டும்.
  • உளுத்தம்பருப்பு பொரிந்ததும் காய்ந்த மிளகாய் சேர்க்க வேண்டும்.
  • பின்பு பூண்டு, இஞ்சி இரண்டையும் சேர்த்து வதக்க வேண்டும்.
  • சிறிதளவு புளி சேர்த்து, கால் டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும்.
  • பின்னர், சுத்தம் செய்து வைத்துள்ள பிரண்டையை சேர்க்க வேண்டும்.
  • பிரண்டை வதங்கும் வரை நன்கு வதக்க வேண்டும்.
  • பின்னர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக இளறி இறக்க வேண்டும்.
  • இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பின் ஆறவைக்க வேண்டும்.
  • சூடு ஆறிய பின்பு, ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

சுவையான சத்தான பிரண்டை துவையல் தயார்.