தினமும் ஏன் சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்ன்னு தெரியுமா?
மனித உடலில் வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையத்திலிருந்து உற்பத்தியாகும் இன்சுலின் மூலம் உடல் திசுக்கள் தங்களுக்குத் தேவையான குளுக்கோஸை ரத்தத்தில் இருந்து பெறுகின்றன. இதில் இன்சுலினின் அளவு குறையும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதையே, டயாபடீஸ் (சர்க்கரை நோய்) என்கிறோம்.
40 வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தங்களுக்குச் சர்க்கரை வியாதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.
உயரத்திற்கு ஏற்ப உடல் எடையை பராமரித்து வர வேண்டியது அவசியமாகும். சர்க்கரை நோயாளிகள் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடக்கூடாது.
அப்படி சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிப்பதுடன், பல நோய்களுக்கு உடலை தாக்கும் அபாயமும் உள்ளது.
எனவே, சர்க்கரை நோயாளிகள், உடலை ஆரோக்கியமாக, ஃபிட்டாக வைத்திருக்க வேண்டும். இதற்கு, உடற்பயிற்சி அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
உடல் எடையைக் குறைக்க, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க, கெட்ட எல்.டி.எல் கொழுப்பு மற்றும் டிரைகிளசரைட் அளவை கட்டுக்குள் வைக்க, தசைகள் – எலும்புகளை உறுதியாக வைக்க, மன அழுத்தம் குறைக்க உடற்பயிற்சி அவசியம் செய்ய வேண்டும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பு குறைவு அல்லது இன்சுலின் செயல் திறன் குறைவு காரணமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். இதைக் கட்டுக்குள் கொண்டு வர உடற்பயிற்சி அவசியமாக உள்ளது.
தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் சர்க்கரை நோயாளிகளுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்
தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் அதிகப்படியான கலோரி எரிக்க முடியும். இதனால் ரத்தத்தில் உள் சர்க்கரை அளவு குறையும்.
தினமும் உடற்பயிற்சி செய்வதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைவதன் காரணமாக இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வது, மாத்திரை மருந்துகள் எடுத்துக்கொள்வதன் தேவையும் குறையும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் முழுவதுக்குமான ரத்த ஓட்டம் சீராகும்.
சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்காவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
ஒரு மணி நேரத்துக்கு உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது.
வாக்கிங், ஜாகிக், ஜூம்பா – நடனம், சைக்கிளிங், நீச்சல், டென்னிஸ், கூடைப்பந்து, கைப்பந்து போன்ற விளையாட்டுகளை விளையாடலாம்.
கடினமான, வெயிட் பயிற்சிகள் தொடங்குவதற்கு முன்பு சர்க்கரை நோய் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.