கல்லீரல் மற்றும் கணையம் நோய்களுக்கு மருந்தாகும் சுண்டைக்காய் குழம்பு

life-style-health
By Nandhini Jul 13, 2021 10:14 AM GMT
Report

சுண்டைக்காய் உருவத்தில் சிறியதாக இருந்தாலும் அதில் அடங்கியுள்ள நன்மைகளின் பட்டியல் மிக பெரியது. சுண்டக்காயின் இலேசான கசப்புச் சுவை சிலருக்குப் பிடிக்காது என்றபோதும், அதன் மருத்துவக் குணங்கள் சுண்டைக்காயின் சிறப்பானதாக மாற்றுகின்றன.

சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்துகள் நிறைந்துள்ளன. எனவே உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவை தடுக்கக் கூடியது.

சுண்டக்காயின் கனிகள்கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும்.

தேவையான பொருட்கள் -

பச்சை சுண்டைக்காய் - 1 கப்,

கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்,

உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய் - 7 அல்லது 8,

தனியா - 1 டீஸ்பூன்,

வெந்தயம் - 1 டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,

நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்,

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,

தாளிக்க

கடுகு - சிறிது,

பூண்டு - 15 பற்கள்,

புளி - ஒரு எலுமிச்சைப்பழ அளவு,

உப்பு - தேவையான அளவு,

கறிவேப்பிலை - ஒரு கொத்து.

கல்லீரல் மற்றும் கணையம் நோய்களுக்கு மருந்தாகும் சுண்டைக்காய் குழம்பு | Life Style Health

செய்முறை -

பச்சை சுண்டைக்காயை சுத்தம் செய்து காம்பைக் கிள்ளி வைக்க வேண்டும். புளியை கெட்டியாகக் கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், வெந்தயம், பூண்டு 5 பற்கள் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆறியதும் நைசாக, தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும்.

கடாயில் மீதியுள்ள நல்லெண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் தாளித்து, பச்சைச் சுண்டைக்காய்களைப் போட்டு வதக்கி, அரைத்த மசாலாக் கலவை ஊற்றி கலக்கவும்.

சுண்டைக்காயோடு மசாலா நன்கு கலந்து வந்ததும் புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க விட வேண்டும்.

கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டு இறக்கி, சூடாக சாதத்துடன் பரிமாற வேண்டும்.

சுவையான பச்சை சுண்டைக்காய் குழம்பு ரெடி.