இதை செய்தால் வெறும் 5 நாளில் மூட்டு வலி குணமாகும் அதிசயம் நடக்குமாம்!
மூட்டுவலி என்பது முன்பெல்லாம் முதியவர்களைப் பாதிக்கும் பிரச்னையாக இருந்தது; இப்போதோ இளம்வயது பிரச்னையாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
இன்றைய இளைய வயதினருக்கு உடல் உழைப்பு குறைந்து வருவதும் உடற்பயிற்சி இல்லாததும் இதற்கு முக்கியக்காரணங்கள்.
கணினித்துறை பெருவளர்ச்சி பெற்ற பிறகு 35 சதவீத இளைஞர்கள் அதிக நேரம் அமர்ந்தே வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு மூட்டுத்தசை இறுகி மூட்டுவலி வந்துவிடுகிறது.
மாறிவரும் உணவுமுறை மூட்டுவலிக்கு அடுத்த காரணம். இளைய தலைமுறையினர் பலரும் துரித உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர்.
இதனால், சிறுவயதிலேயே உடல் பருமன், ஹார்மோன் கோளாறுகள் வந்து அவதிப்படுகின்றனர். இது நாளடைவில் மூட்டு வலிக்கும் வழி அமைத்து விடுகிறது.
இந்த பொருட்களை நாம் பயன்படுத்தினால் வெறும் 5 நாளிலில் மூட்டுவலி பறந்துபோய்விடுமாம் - அதைப்பற்றி இப்போது பார்ப்போம்.
காரட் சாறு:
தினமும் காரட் சாறு ஒரு டம்ளருடன் எலுமிச்சை சாறை சேர்த்து அருந்தி வந்தால் கால்வலிகள் விரைவில் சரியாகும்.
வெந்தயம்:
தினமும் இரவில் சிறிது வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் காலியில் நீரோடு சேர்த்து வெந்தயத்தையும் மென்று உண்டு வந்தால் முழங்கால் வலி குணமாகும்.
இஞ்சி மஞ்சள் தேநீர் :
3 கப் நீரில் ஒரு ஸ்பூன் இஞ்சி பொடி , மஞ்சள் தூள் சேர்த்து 20 நிமிடங்கள் கொதிக்க விட்டு, பின்னர் இந்த நீரை வடிகட்டி தேநீர் போல குடித்து வந்தால் மூட்டுவலி சரியாகும்.
வெங்காயம்:
வெங்காயத்தில் உள்ள சல்பர் முழங்கால் மூட்டு வலிகளை குறைக்க உதவி செய்யும். இதன் பைட்டோகெமிக்கல்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் தூண்டும். ஆகவே, மூட்டு வலி உள்ளவர்கள் உணவுகளில் வெங்காயத்தை சேர்த்து கொள்ள வேண்டும்.
கடுகு எண்ணெய்:
இரண்டு ஸ்பூன் கடுகு எண்ணெய்யுடன் 5 பூண்டு பற்களை போட்டு வெதுவெதுப்பான சூட்டில் முழங்கால்களில் ஒத்தடம் கொடுத்து வந்தால் உடனே மூட்டுவலியிலிருந்து நிவாரணம் கிடைத்துவிடும்.
தேங்காய் எண்ணெய்:
ஒரு கப் தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பான சூட்டில் முழங்காலில் ஒத்தடம் கொடுத்து வந்தால் முழங்கால் வலி சரியாகிவிடும்.
மஞ்சள் மற்றும் பால்:
ஒரு டம்ளர் பாலில் இரண்டு ஸ்பூன் மஞ்சள் போட்டு அருந்தி வந்தால் மூட்டு வலி பறந்துபோகும்.
வெந்தய பசை :
இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை பொடி செய்து, சிறிது நீர் கலந்து பசை போலாக்கி அதனை வலியுள்ள முழங்காலில் தடவி வந்தால் மூட்டுவலி குணமாகிவிடும்.