மார்பு சளியை விரைவில் கரைக்கும் மிளகு ரசம்? எப்படி செய்வது என்று பார்ப்போம்
மிளகில் காரச்சத்துகள் அதிகமுள்ளது. இந்த காரத்தன்மை உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதோடு தொற்று நோய்கள், ஜுரம் போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும்.
மழை மற்றும் குளிர்காலங்களில் பலருக்கும் ஜலதோஷம் தொற்றி சளி மற்றும் இருமல் போன்றவை ஏற்பட்டு அவதியுறுகின்றனர். இக்காலங்களில் சில மிளகுகளை வாயில் போட்டு மென்று சிறிது வெண்ணீரை அருந்தினால் இத்தொல்லைகள் நீங்கும்.
நெஞ்சில் அதிகப்படியான சளியை கரைக்க இதோ மிளகு ரசம் எப்படி செய்வது என்று பார்ப்போம் -
தேவையான பொருட்கள்:
புளி : சிறிய எலுமிச்சை அளவு
தக்காளி : 3
மிளகு : 1
ஸ்பூன் சீரகம் : 1/2 ஸ்பூன்
பூண்டு : 8 பல் (சிறியது)
கருவேப்பிலை : 2 கீற்று
கொத்தமல்லி இலை : சிறு கைபிடி
தாளிக்க:
கடுகு : ¼ டீஸ்பூன்
சீரகம் : ¼ டீஸ்பூன்
வெந்தயம் : ¼ டீஸ்பூன்
பெருங்காயம் : சிறிதளவு
நல்லெண்ணெய் : தேவைக்கு
உப்பு : தேவைக்கு
செய்முறை:
புளியை தேவையான தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும்.
தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
மிக்ஸியில் முதலில் மிளகு, சீரகத்தை நன்கு பொடித்துக் கொள்ள வேண்டும்.
அதனுடன் பூண்டு, கருவேப்பிலை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
புளிக் கரைசல், அரைத்த தக்காளி விழுது, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை இவை மூன்றையும் ஒன்றாக கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து தாளிக்க வேண்டும்.
தணலைக் குறைத்து விட்டு அதனோடு அரைத்த மிளகு சீரகக் கலவையை சேர்த்து ½ நிமிடம் வதக்கி பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும்.
கடைசியாக புளி, தக்காளி மற்றும் கொத்தமல்லி இலை கலந்த கலவையை ஊற்றி, உப்பு சேர்க்க வேண்டுட்ம. தணலைக் கூட்டி வைத்து, ரசம் நுரை கூடியதும் பாத்திரத்தில் மூடி விட வேண்டும்.
சுவையான மிளகு ரசம் தயார்