சர்க்கரை நோயையும், பித்தத்தையும் கட்டுப்படுத்தும் தூதுவளை சட்னி! செய்வது எப்படி?

life-style-health
By Nandhini Jul 08, 2021 12:18 PM GMT
Report

நீரிழிவு ஏற்படும் சர்க்கரை வியாதிக்கு சிறந்த மருந்தாக தூதுவளை இருக்கிறது இது கசப்பு தன்மை அதிகம் கொண்டதால் சாப்பிட்டவுடன் சீக்கிரத்திலேயே செயல்புரிந்து ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை கட்டுக்குள் கொண்டுவருகிறது. தூதுவளை இலை பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு வெகு விரைவிலேயே நீரிழிவு கட்டுப்படும்.

உடலில் பித்தம் அதிகரிக்கும் போது சிலருக்கு தலைவலி, மயக்கம் போன்றவை ஏற்படும்.உடலில் ஏற்படும் பித்த அதிகரிப்பை சரி செய்து அதை சமப்படுத்துவதில் தூதுவளை சிறப்பாக செயல்படுகிறது. தூதுவளை இலையை நன்கு பொடியாக்கி பசும்பாலில் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம், தலைவலி போன்றவை தீரும்.

தூதுவளை சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போம் -

தேவையான பொருட்கள் :

தூதுவளை கீரை - ஒரு கப்,

உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்,

மிளகு - ஒரு டீஸ்பூன்,

சீரகம் - அரை டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் - சிட்டிகை,

புளி - சிறிதளவு,

நெய், உப்பு - தேவைக்கு.

சர்க்கரை நோயையும், பித்தத்தையும் கட்டுப்படுத்தும் தூதுவளை சட்னி! செய்வது எப்படி? | Life Style Health

செய்முறை :

வாணலியில் நெய் விட்டு உளுந்தம் பருப்பு, மிளகு, சீரகம் சேர்த்து வறுத்து எடுக்க வேண்டும்.

அதே நெய்யில் கீரையை சேர்த்து நன்கு வதக்கி எடுக்க வேண்டும்.

வதக்கிய அனைத்தும் நன்கு ஆறிய பின் அனைத்தையும் ஒன்றாக கலந்து மிக்சியில் போட்டு உப்பு, புளி சேர்த்து விழுதாக அரைத்து எடுக்க வேண்டும்.

இப்போ சூப்பரான தூதுவளை சட்னி ரெடி.