உடலில் தேங்கியுள்ள கெட்ட நீரை வெளியேற்ற இதை தினமும் சாப்பிட்டு வாருங்கள்!
நீர் தேக்கம் அல்லது நீர் கட்டு என்பது ஒடிமா என்ற பெயரில் மருத்துவர்கள் அழைக்கின்றனர். நமது உடலில் உள்ள செல்களுக்கு வெளிப்புறத்தில் உள்ள சுவருக்கு இடையை நீர் தேங்கி கொள்ளுமாம். இந்த நீர் வற்றாமல் அந்த இடம் இருந்தால் வீங்க தொடங்கி விடும்.
இந்தப் பிரச்சினை அழற்சி அல்லது கிருமிகள் தொற்றால் ஏற்படும். ஆனால், சில பேருக்கு எந்த வித நோய் தொற்றும் இல்லாமல் கூட இந்த பிரச்சினை ஏற்படுமாம்.
எடுத்துக்காட்டாக, டயாபெட்டீஸ் நோயாளிகளுக்கு, கருவுற்ற தாய்மார்களுக்கு இது போன்று நீர் தேக்கம் ஏற்படுகிறது.
அதே மாதிரி நீண்ட நேரம் பயணம் மேற்கொள்ளும் போதும், ஓரே இடத்தில் இருப்பது கால்களில் உள்ள இரத்தக் குழாயான சிரைகளில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சினைகளிலிருந்து விடுபட கீழ்காணும் உணவுகளை தயார் செய்து சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சினையிலிருந்து எளிதாக விடுபட முடியும்.
நீரில் ஊறிய உலர்ந்த திராட்சை :
நீரில் ஊறிய உலர்ந்த திராட்சைகளில் அதிகப்படியான பொட்டாசியம் இருக்கிறது. ஒரு கைப்பிடியளவு உலர்ந்த திராட்சையை இரவில் ஊற வைத்து அடுத்த நாள் அதை சாப்பிட்டு வந்தால், உடலில் தேங்கிய கெட்ட நீர் முற்றிலுமாக வற்றிவிடும்.
கொத்தமல்லி தேநீர் :
பெருஞ்சீரகம், கொத்தமல்லி விதைகள் ஒரு சிறந்த டையூரிடிக் ஏஜென்ட்டாகும். இவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் அருந்தி வந்தால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி விடும்.
பெருஞ்சீரகம் டீ:
தண்ணீரில் கொதிக்க வைத்த பெருஞ்சீரகத்தை குடித்து வந்தால், பெருஞ்சீரகத்தில் உள்ள அனிதோல் என்ற பொருள் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்ற உதவுகிறது.
இதில் உள்ள டையூரிடிக் பொருள் கலந்திருப்பதால், நமது உடலில் உள்ள அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறது. அதோடு, நமது இரத்த அழுத்தத்தையும் குறைக்கும் வல்லமை கொண்டது.
பார்ஸிலி டீ :
பார்ஸிலியில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை அதிகப்படியான சோடியம் உருவாகுவதை தடுக்கும், பார்ஸிலி டீயை தினமும் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள அதிகப்படியான நீர் மற்றும் நச்சுக்களை வெளியேற்றி விடுமாம்.
கொதிக்கும் நீரில் பார்ஸிலி இலைகளை போட்டு ஒரு கப் தண்ணீரில் 5 நிமிடங்கள் வைத்து, பின்பு அதை வடிகட்டி குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி விடும்.
கிரான்பெர்ரி ஜூஸ் :
ஒரு நீளமான டம்ளரில் தினமும் ஒரு முறை கிரான்பெர்ரி ஜூஸ் குடித்தால், உடலில் உள்ள நீர் தேக்கத்தை சரி செய்யுமாம். ஏனெனில் இது ஒரு டையூரிடிக் என்பதால் உடலில் தேங்கியுள்ள தேவையில்லாத நீர்ச்சத்தை வெளியேற்றுவிடும்.