என்னது... அளவுக்கு அதிகமாக தேன் சாப்பிட்டால் ஆபத்தா?
தேன் ஒரு சிறந்த உணவுப்பொருள் மட்டுமின்றி அருமருந்தாக இருக்கிறது.
நம் முன்னோர்கள் பயன்படுத்திய சிகிச்சை முறைகளில் தேன் முக்கிய மருந்துப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
மேலும் மருந்து பொருளாக இருந்தாலும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற சொல்லுக்கேற்ப பல பக்க விளைவுகள் ஏற்படவும் காரணமாக இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அளவுக்கு அதிகமாக தேன் எடுத்துக் கொண்டால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி பார்ப்போம் -
உடல் எடை அதிகரிப்பு
தேனில் காணப்படும் சர்க்கரை மற்றும் காபோஹைட்ரேட் இணைந்து உங்கள் உடல் எடையை அதிகரிக்கும். இது பற்றியும் நீங்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
பற்களில் பாதிப்பு
தேனை அதிகமாக உட்கொள்வது என்பது சர்க்கரையை அதிகமாக சாப்பிடுவதாக அர்த்தமாகிவிடும். அது வாய்வழி சுகாதாரத்திற்கு நல்லதல்ல. தேன் எளிதாக பற்களில் ஒட்டும் தன்மை கொண்டது. ஆதலால் தேன் உட்கொண்டதும் நன்றாக வாய் கொப்பளித்துவிட வேண்டும். இல்லாவிட்டால் பற்களில் படிந்து பற்சிதைவுக்கு வழிவகுத்துவிடும்.
வயிற்றுப் பிடிப்பு
தேன் சாப்பிட்டால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும். வயிற்றுப் பிடிப்பும் தோன்றலாம்.
இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும்
சர்க்கரை நோயாளிகள் அளவுக்கதிகமாக தேனை எடுத்துக் கொண்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து ஆபத்தை விளைவிக்க வாய்ப்புண்டு.
இரைப்பை பாதிப்பு
அளவுக்கு அதிகமாக தேன் சாப்பிடும் போது, அதிலுள்ள பிரக்டோஸ் உடலில் சேரும் போது, அது குடலிலும், இரைப்பையிலும் பாதிப்பு ஏற்படுத்தும். இதனால் வயிற்றுவலி, வீக்கம் , வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படலாம்.