பழங்களில் உப்பு போட்டு சாப்பிடுவதால், அதில் மறைந்திருக்கும் உண்மை என்னனு தெரியுமா? பாருங்க....
நாம் பெரும்பாலும் நெல்லி, மாங்காய் போன்றவற்றில் உப்பு தூவி சாப்பிடுவோம். அப்படி சாப்பிடும்போது அதன் சுவையே தனி தான். அந்த சுவைக்கு அடிமையாகதவர்கள் இருக்கவே மாட்டார்கள். ஆனால், இப்படி பழங்களில் உப்பு போட்டு சாப்பிடும்போது வேறு பல நன்மைகளும் அடங்கியிருக்கின்றதாம்.
அதாவது, பழங்களில் எண்ணற்ற பாக்டீரியாக்கள் இருக்கிறது. நாம் உப்பு தூவி சாப்பிடும்போது அந்த பழங்களை பிரஷ்ஷாகவும்,அதில் உள்ள பாக்டீரியாக்கள் மேலும் வளராமலும் தடுக்குமாம்.
அதேபோன்று உப்பு கலந்த நீரில் பழங்களை கழுவினால், பழங்களில் உள்ள பூச்சிகொல்லி மருந்துகளின் தாக்கம் மற்றும் கிருமிகள் அனைத்தும் அழிந்துவிடுமாம்.
திராட்சை, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற பழங்களில் அசிட்டிக் அதிகமாக இருக்கும். அதேபோல், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருக்கின்றன.
அதனால் இதனுடன் உப்பு சேர்த்துக் கொண்டால் வயிற்றில் சுரக்கும் அமிலத்தை சமநிலையாக்கிறதாம். இப்படி பழங்களில் உப்பு போட்டு சாப்பிட்டால், நம் உடம்பில் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்ந்து விடுமாம்.
குறிப்பாக, பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால், பழங்களில் உள்ள புளிப்பு குறைவதோடு, பழங்கள் கனியாமல் இருந்தாலும் பச்சைவாசனை தெரியாது.
உப்பானது உணவின் சுவையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறதாம். அது உணவில் மட்டுமில்லாமல் பழங்களிலும் பயன்படுகிறது. எனவே புளிப்பு சுவையுடைய பழங்களை உப்பு தூவி உண்பது மிகவும் சிறந்தது. கழுவி சாப்பிடக்கூடிய பழங்களை உப்பு கலந்த தண்ணீரில் கழுவி உண்பது மிகவும் ஆரோக்கியமானது.