எண்ணெய் தேய்த்து குளித்தால் இவ்வளவு நன்மை கிடைக்குமா? நீங்களே பாருங்க!
சருமம், நம் உடலுக்கு பாதுகாப்பு கவசமாக விளங்குகின்றது. சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசு, மாறி வரும் பருவ காலங்களுக்கு ஏற்ப தட்ப வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவைகளால் சருமம் பாதிக்கப்படுகிறது.
நமது சருமத்தில் படியும் எல்லாவிதமான அழுக்குகளும் நீரில் கரையும் தன்மை வாய்ந்தவை இல்லை, சில வகை அழுக்குகள் கொழுப்பில்தான் கரையும். அப்படிப்பட்ட அழுக்குகள் எண்ணெய் தேய்க்கும்போது அகற்றப்பட்டு விடும்.
தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்தால், தலை முடிக்கொட்டாது என்று சிலர் கூறுவார்கள். ஒரு சிலர் எண்ணெய் தேய்ப்பதால் தான் முடிக்கொட்டுகிறது என்று கூறுவார்கள்.
ஆனால், உண்மையில் சொல்லப்போனால், எண்ணெய் வைக்கும் முறையை தான் மாற்ற வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை. நமது முன்னோர்கள் உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்காக கண்டு பிடித்த எண்ணற்ற இயற்கை வழிகளில் எண்ணெய் குளியலும் ஒன்று. நாம் வாழும் தென்னிந்திய பகுதி அதிக வெப்பம் நிறைந்தது.
அதனால் வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது உடல் நலத்திற்கு ஏற்றது. நம் முன்னோர்கள் பல தலைமுறைகளாக கடைப்பிடித்து வந்த இந்த பழக்கம் பின்பு வழக்கத்தில் இருந்து மறைந்திருந்தாலும், தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டு சனிநீராடலுக்கு மவுசு அதிகரித்து வருகிறது.
நல்லெண்ணெய் குளியல்
- உடலில் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பதாக இருந்தால் சூரிய உதயத்திற்குப் பிறகு குளிப்பது சிறந்தது.
- காரணம் சூரிய ஒளியிலிருந்து விட்டமின் டி சத்து நமக்கு கிடைக்கப் பெறுவதால் உடலில் எண்ணெய் தேய்த்து விட்டு சுமார் ஒரு மணிநேரம் வெயிலில் நின்றால் உடலுக்கு நன்மையை கொடுக்கும்.அதிகாலையில் தலைக்கு எண்ணை வைத்துக் குளிப்பது கூடாத விஷயம்.
எண்ணெய் குளியலில் கிடைக்கம் நன்மைகள்
- எண்ணெய் தேய்த்து குளிப்பதால் கண், காது, மூக்கு, சருமம் போன்ற புலன் உறுப்புகள் சிறப்பாக செயல்படும்.
- எண்ணெய்யை உடலில் தேய்க்கும்போது ரத்த ஓட்டம் தூண்டப்படும்.
- எண்ணெய் தேய்த்து குளிப்பதால் தசைகள் நெகிழ்ந்து நன்றாக செயல்படும்.
- இதனால் உடலுக்குள் பத்து முதல் பதினைந்து சதவீதம் பிராணவாயு கூடுதல் செல்வதாக ஆராய்ச்சி மூலம் தெரியவந்திருக்கிறது.
- எண்ணெய் தேய்த்து குளிப்பதால் தசைகளில் தேங்கியுள்ள கழிவு, நிணநீர் மூலம் ரத்த ஓட்டத்தில் கலந்து சுத்தி கரிக்கப்பட்டு கழிவாய் வெளியேற்றப்படுகிறது.
- இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.
- எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடலில் உள்ள அதிகபடியான சூட்டை சமநிலைக்கு கொண்டு வந்து, உடலின் நோயெதிர்ப்புத் திறனை அதிகரித்து உடலை சூடு சம்பந்தமான நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
- எண்ணெய் தேய்த்து குளிப்பதால் இரைப்பு, இளைப்பு நோய்கள், மூக்கடைப்பு, உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம், முகத்தில் உண்டாகும் சரும நோய்கள், அதிகப்படியான வியர்வை போன்றவை நீங்கும்.
- எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடலில் உள்ள ஐம்புலன்களுக்கும் பலம் உண்டாகும். தலை, முழங்கால்கள் உறுதியடையும். முடி கறுத்து வளரும்.
- தலைவலி, பல்வலி நீங்கும். எண்ணெய் தேய்த்து குளிப்பதால் தோல் வறட்சி நீங்கி தோல் மினுமினுப்பாகும். உடல் பலமாகும், சோம்பல் நீங்கும், நல்ல குரல் வளம் உண்டாகும். நாவின் சுவையின்மை நீங்கும்.
செய்ய கூடாதவை
- அதிக வெயிலில் அலையக்கூடாது. குளிர்ந்த உணவுகளான பானங்கள், ஐஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளக் கூடாது.
- அன்றைய தினம் உடலுறவு வைத்து கொள்ளக் கூடாது.
- நண்டு, கோழி, மீன், செம்மறி ஆடு போன்ற அசைவ உணவுகளைத் அன்றைய தினம் தவிர்த்து விட வேண்டும்.