சர்க்கரை நோயை விரட்டியடிக்கும் பூண்டு குழம்பு

life-style-health
By Nandhini Jul 06, 2021 05:39 AM GMT
Report
283 Shares

மருத்துவ குணங்கள் நிறைந்த உணவு பொருட்களில் பூண்டு மிகவும் முக்கியமானது. பூண்டில் அலிசின், அலைல் ப்ரொபைல் டைசல்ஃபேட், சிஸ்டீன் சல்ஃபாக்சைடு ஆகியவை நிறைந்திருக்கிறது.

இதில் ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டிபங்கல் தன்மை இருப்பதால் உடல் இன்சுலின் சுரப்பிற்கு சரியாக எதிர்வினையாற்றும். தொடர்ச்சியாக பூண்டு உட்கொண்டு வந்தால் இருதய நோய் மற்றும் நீரிழிவு நோயை உண்டாக்கும் ஹோமோசிஸ்டின் என்னும் அமினோ அமிலத்தை குறைக்கும்.

தேவையான பொருட்கள் :

பூண்டு - 30

பல் சின்ன வெங்காயம் - 20

தக்காளி - 1

மல்லித்தூள் - 2

தேக்கரண்டி குழம்பு மிளகாய்த்தூள் - 2

தேக்கரண்டி மஞ்சள்தூள் - 1 /2

தேக்கரண்டி புளி - நெல்லிக்காய்

அளவு நல்லெண்ணெய் - 1

மேசைக்கரண்டி தாளிக்க :

கடுகு - 1

தேக்கரண்டி சோம்பு - 1

தேக்கரண்டி வெந்தயம் - 1 /2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

சர்க்கரை நோயை விரட்டியடிக்கும் பூண்டு குழம்பு | Life Style Health

செய்முறை :

புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதில் மல்லித்தூள், குழம்புதூள், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ள வேண்டும். 

வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். 

பூண்டு சிறியதாக இருந்தால் நறுக்க வேண்டியது கிடையாது. 

தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். 

கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பூண்டை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 

தக்காளி வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். 

அடுப்பை குறைந்த தீயிலேயே வைத்து குழம்பு திக்காக ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும். 

சூப்பரான செட்டிநாடு பூண்டு குழம்பு ரெடி.

குறிப்பு :

பூண்டை வதக்கும்போது அதனுடன் சுண்டைக்காய் வற்றல் அல்லது மனத்தக்காளி வற்றல் சேர்த்தால், வத்தல் குழம்பு என ஆகிவிடும்.