தாம்பத்தியத்தில் செயல்திறனை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிட்டு வர வேண்டுமாம்!

life-style-health
By Nandhini Jul 04, 2021 03:48 AM GMT
Report

தற்போது திருமணமான பல தம்பதியர்களின் தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இருப்பதில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டுமென்று கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்கின்றனர்.

அலுவலகத்தில் வேலைப்பளுவின் காரணமாக மன அழுத்தம் அதிகரித்து, அதன் விளைவாக உறவில் ஈடுபட முடியாமல் அவஸ்தைப்படுகின்றனர்.

இவ்வுலகில் பிறந்த அனைவரும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின் தனக்கென்று ஒரு துணையை தேர்ந்தெடுத்து நம் இல்லற வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம். அந்த இல்லற வாழ்க்கையின் மூலம் தான் தனக்கென்று ஒரு சந்ததியை உருவாக்கி கொள்ள முடியும்.

இல்லற வாழ்வில் இணையும் ஆண், பெண் இருவரும் தன் அன்பை, காதலை, புரிதலை வெளிபடுத்த உதவும் ஒரு கருவியாக அமைவது தாம்பத்தியம் தான். மன அழுத்தத்தை குறைக்கவும் தாம்பத்தியம் பெரிதும் உதவுகிறது. தனக்கான சந்ததியை உருவாக்குவதற்க்காகவே திருமணத்திற்கு பின் தாம்பத்தியத்தில் ஈடுபடும் வழக்கம் இருந்து வருகிறது.

தாம்பத்யம் திருப்திகரமாக அமைய சில விஷயங்களை நாம் கட்டாயம் சில விஷயங்களை செய்ய வேண்டும். தாம்பத்தியம் சிறப்பாக அமைய முதலில் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு நாம் ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நாம் என்ன மாதிரியான உணவு எடுத்துக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நம்முடைய உடலின் ஒவ்வொரு உறுப்பின் வளர்ச்சியும் ஆரோக்கியமும் உள்ளது. சில உறுப்புக்கள் நம்முடைய உடலின் உள் உறுப்பை ஒத்ததாக இருக்கும். அது அந்த உறுப்பின் ஆரோக்கியத்துக்கு நல்லது என்ற கருத்து உள்ளது.

உதாரணத்துக்கு மூளை போல தோற்றம் அளிக்கும் வால்நட் உண்மையில் மூளைக்கு நல்லது. அது போன்று நிறைய உணவுகள் உள்ளன. எல்லா உணவுகளுமே இனப்பெருக்க மண்டலங்களின் செயல்பாட்டுக்கு நல்லதுதான்.

இருப்பினும் வால்நட், ஸ்டிராபெர்ரி, அவகேடோ, பாதாம் போன்ற சில உணவுப் பொருட்கள் மிகப்பெரிய அளவில் உதவி புரிகின்றன என பாலியல், இனப்பெருக்க மண்டல மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். வால்நட் வால்நட் மூளைக்கு மட்டுமல்ல ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க உதவுகிறது.

மேலும் விந்தணுவின் வடிவம், இயக்கம், இடப் பெயர்வு போன்றவற்றை மேம்படுத்துகிறது. குழந்தைப் பேற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்க ஆண்கள் வால்நட்டை தினசரி எடுத்துக்கொள்வது நல்லது.

செலரி

செலரியை பச்சையாக சாப்பிடுவதே சிறந்தது. அதற்கு செலரியை நன்கு கழுவி, சிறு துண்டுகளாக வெட்டி, படுக்கைக்கு செல்லும் முன் சாப்பிட்டு செல்லுங்கள்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் புரோமெலைன் நொதி உள்ளது. இது பாலுணர்ச்சியைத் தூண்டும் மற்றும் ஆணின் மலட்டுத்தன்மையைப் போக்கும். மேலும் இப்பழத்தில் உள்ள பொட்டாசியம், பி வைட்டமின்களான ரிபோஃப்ளேவின், ஒட்டுமொத்த உடலின் ஆற்றலையும் அதிகரிக்கும்.

அத்திப்பழம்

அத்திப்பழத்தில் பாலுணர்ச்சியை அதிகரிக்கும் அமினோ அமிலங்கள் ஏராளமான அளவில் உள்ளது. மேலும் இவை பாலியல் ஸ்டாமினாவை மேம்படுத்தக்கூடியவை. ஆகுவே நற்பதமான அத்திப்பழங்களை அப்படியே சாப்பிடுங்கள். இல்லாவிட்டால் ஜூஸ் வடிவில் கூட எடுங்கள்.

அவகேடோ

அவகேடோவில் ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி6 போன்றவை அதிக அளவில் உள்ளன. ஆரோக்கியமான பாலியல் உணர்வு ஏற்பட இவை மிகவும் அவசியம். குறிப்பாக வைட்டமின் பி6 இனப்பெருக்க ஹார்மோன்கள் சமநிலையை அடைய உதவி செய்கிறது.

தர்பூசணி

தர்பூசணியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஆண்களின் விரைப்புத் தன்மை மற்றும் உணர்ச்சிப் பெருக்கை அதிகரிக்கச் செய்கிறது. இதில் உள்ள சிட்ரிலின் என்ற ரசாயனம் ஆர்ஜினின் மற்றும் அமிலோ அமிலத்தை சுரக்கச் செய்கிறது. தாம்பத்திய நேரத்தில் ஆண் உறுப்புக்கு ரத்த ஓட்டம் அதிகமாக இருக்க துணை செய்கிறது.

பாதாம்

பாதாமில் உள்ள ரசாயனம் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் தளர்வு படுத்தவும் துணை செய்கிறது. நீண்ட விரைப்புத் தன்மைக்குப் பாதாம் துணை செய்கிறது.

டார்க் சாக்லெட்

டார்க் சாக்லெட் சாப்பிடுவது மூளையில் எண்டார்ஃபின் மற்றும் செரட்டோனின் ஆகிய ரசாயனங்கள் வெளியிட துணை செய்கிறது. இதனால் நல்ல மனநிலை கிடைக்கிறது. அது தாம்பத்திய உறவு நீண்டதாக ஆரோக்கியமாக இருக்க துணை செய்கிறது.

முருங்கைக் காய்

முருங்கைக் காய், முருங்கைக் கீரை, முட்டை, அத்திப்பழம், மாதுளை போன்ற பல உணவுகள் இனப்பெருக்க மண்டலத்தின் செயல்திறனை மேம்படுத்த உதவுகின்றன. அவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது குழந்தைப் பேற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும்.