தினமும் 4 பேரீட்சைப்பழம் சாப்பிட்டு வந்தால் இந்த நோய்களெல்லாம் நம்மை தொட்டுக்கூட பார்க்காது!
பேரீட்சைப்பழம் ஒரு அதிசயமிக்க பழம் ஆகும். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீட்சைப்பழம் முதலிடம் வகிக்கிறது.
இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.
இரும்புசத்து அதிகம் உள்ள பேரீட்சைப்பழம் நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தது.
பழங்கள் அதிகம் சாப்பிடும் பழக்கத்தை கொண்ட மக்கள் நோய்களால் பாதிக்கப்படுவதில்லை. நாம் உண்பதற்கு உகந்த பழங்கள் எல்லாமே உடலுக்கு நன்மை தரக்கூடியது.
நிறைய பேர் டயட்டில் இருக்கும்போது பேரிச்சம் பழத்தையும் சேர்த்துக் கொள்வார்கள். ஏனென்றால்
அதில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் மருத்துவர்களே தினமும் பேரீட்சைப்பழத்தையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள்.
தினமும் 4 பேரீட்ச்சைப்பழம் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி பார்ப்போம் -
இரத்த சோகை
இரத்த சோகை பிரச்சனை உடையவர்கள் இந்த பேரீட்ச்சைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் விரித்தி அடைந்து இரத்த சோகை விரைவில் குணமடையும்.
மலச்சிக்கல்
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இரவு நேரத்தில் பேரீட்ச்சைப்பழத்தை நீரில் ஊற வைத்து அதனை காலையில் சாப்பிட்டு வருவதினால் சுலபமாக மலம் கழிக்க உதவும். ஏனென்றால், பேரிச்சம் பழத்தில் உள்ள நார்ச்சத்து உடலை சீராக இயக்கி செரிமானத்தை சரி செய்து மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்து கொள்கிறது.
பல் சொத்தை
பல் சொத்தை உடையவர்கள் இந்த பேரீட்ச்சைப்பழத்தை எடுத்து வந்தால் பற்கள் சம்மந்தமான எந்த பிரச்சனையும் உங்களை நெருங்காது. பற்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஃப்ளோரின் அதிக அளவில் உள்ளது.
பெண்களுக்கு
தினமும் 4 பேரீட்ச்சைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், கர்ப்ப காலத்தில் பிரசவத்திற்கு பின்னர் உண்டாகும் உடல் எடையை கட்டுப்படுத்த முடிவதுடன், தாய் - சேய் இருவருக்கும் தேவையான இரும்பு சத்தும் கிடைக்கும்.
கால்சியம்
கால்சியம் சத்து குறைபாட்டால் எலும்பு பிரச்னைக்கு ஆளாகும் நபர்கள் தொடர்ந்து 4 பேரீட்சைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானம் விரைவில் குணமாகும்.
நரம்பு மண்டலம்
பேரீட்ச்சைப்பழத்தில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், தினமும் 4 பேரீட்ச்சைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
கண் பார்வை
வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த தினமும் 4 பேரீட்ச்சைப் பழத்தை சாப்பிட்டு வரலாம்.
கெட்ட கொலஸ்ட்ரால் குறைய
பேரிச்சம் பழத்தை தினமும் 4 சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.