பாய்லர் கோழி முட்டையை விட காடை முட்டையில் இவ்வளவு சத்து இருக்கா? நீங்களே பாருங்க!

life-style-health
By Nandhini Jul 01, 2021 12:28 PM GMT
Report

காடை முட்டை பார்க்க சிறியதாக இருக்கும். அதன் மேல் பகுதி கருமையான புள்ளிகளுடன் காணப்படும். இந்த முட்டையை பச்சையாகவோ அல்லது குழம்பு வைத்தோ சமைத்து சாப்பிடலாம்.

இந்த காடை முட்டையை கிராமங்களில் வாழும் மக்கள் பச்சையாக குடிப்பார்கள். நம்மில் பல பேர் பாய்லர் கோழி முட்டையை தான் விரும்பி சாப்பிட்டு வருகிறோம்.

ஆனால் உண்மையில் பாய்லர் கோழி முட்டையை விட, காடை முட்டையே மிகவும் சிறந்தது. ஏனென்றால், ஏராளமான சத்துக்கள் காடை முட்டையில்தான் அடங்கி இருக்கின்றன.

காடை முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் -

வைட்டமின்கள்

காடை முட்டையில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் மற்றும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் பாய்லர் கோழி முட்டையில் உள்ளதை விட காடை முட்டையில் அதிக அளவில் உள்ளது. வைட்டமின் பி1 கோழி முட்டையில் 50% என்றால், காடை முட்டையில் 140% இருக்கின்றது.

புரோட்டீன்

பாய்லர் கோழி முட்டையில் 11% புரோட்டீன் உள்ளது. ஆனால், காடை முட்டையில் 13% புரோட்டீன் உள்ளது.

புற்று நோய் உள்ளவர்கள்

புற்று நோயின் வளர்சிதை தடுக்கும் கார்சினோஜெனிக் பொருட்கள் காடை முட்டையில் அதிகளவில் உள்ளது. புற்று நோய் உடையவர்கள் இதனை சாப்பிட்டு வர, புற்று நோய் குணமாகும்.

அலர்ஜி

காடை முட்டையை சாப்பிடுவதால் நம் உடம்பில் ஏற்படும் அலர்ஜி மற்றும் ஒவ்வாமை பிரச்சினைகள் வராமல் தடுக்கும். அல்சர் உள்ளவர்கள் காடை முட்டையை சாப்பிட்டு வந்தால், செரிமான பாதையில் உள்ள காயங்கள் மற்றும் புண்களை ஆற்றும்.

குழந்தைகளுக்கு

தினமும் 2 காடை முட்டையை வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், அவர்களின் வளர்ச்சி சீராக இருக்கும். உடல் வலிமை தினமும் 2 காடை முட்டை சாப்பிட்டு வந்தால் உடல் வலிமையுடனும், நோய் தாக்காமல் ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.

இரத்த சோகை

உங்கள் உடலில் இரத்தத்தில் அளவு குறைவாக இருந்தால், காடை முட்டையை தினமும் சாப்பிட்டு வாருங்கள். உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். இரத்த சோகை பிரசினைகள் ஏற்படாது.

கர்ப்பிணிகள்

கர்ப்பிணிகள் இந்த முட்டையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவு சீராக இருக்குமாம்.

ஞாபக சக்தி

காடை முட்டை நமது மூளையின் செயல்பாட்டினை தூண்டி,அதிக ஞாபக சக்தியை அதிகரிக்கும். நரம்பு மண்டலத்தின் செயல்பாடு தினமும் 2 காடை முட்டை சாப்பிட்டு வந்தால் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டினை அதிகரிக்கும்.

சிறுநீரக கற்களை கரைக்க

தினமும் 2 காடை முட்டை சாப்பிட்டு வந்தால், நம் உடலில் உள்ள டாக்சின்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் கனிமங்களை நீக்கி, பித்த கற்கள் மற்றும் சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்றும்.

உடல் எடையை குறைக்க

தினமும் 2 காரை முட்டை சாப்பிட்டு வந்தால், உடல் எடை சற்று குறைய ஆரம்பிக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க

தினமும் காடை முட்டை சாப்பிட்டு வந்தால், நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்யும். நீரிழிவு, மூச்சுக்குழாய் ஆஸ்துமா மற்றும் காச நோய் போன்ற பிரசினைகள் வராமல் தடுக்கும்.