நுரையீரல் சளியை விரட்டியடிக்க, நோய் எதிர்ப்பு சக்தி பெற இஞ்சி, பூண்டு துவையல்!
உங்களுக்கு அடிக்கடி தலைவலி, தசைகளில் வலி போன்றவை உண்டானால், கடைகளில் கிடைக்கும் மருந்துகளை சாப்பிடுவதை விட இஞ்சி, பூண்டு விழுதினை உணவில் சேர்த்து வருவது நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
நீண்ட காலமாக மருந்துகளை உட்கொண்டு வந்தால் அது பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.
ஆனால் இயற்கையாக கிடைக்கும் இஞ்சி பூண்டு விழுதினை உணவில் சேர்ப்பதன் மூலமாக ஒற்றை தலைவலி, பல்வலிகள், முதுகு வலி, தசைகளில் உண்டாகும் வலிகள் போன்றவை குணமாகும்.
எப்படி இஞ்சி, பூண்டு துவையல் செய்வது என்பதை பார்ப்போம்
தேவையான பொருட்கள்
இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, கடலைப்பருப்பு, உப்பு.
தாளிக்க
கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை.
செய்முறை
வாணலில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு, உரித்த பூண்டு பல், நறுக்கிய இஞ்சி துண்டு , காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு ஆகியவற்றை தனித்தனியே போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்க வேண்டும்.
பின்னர் ஒரு மிக்ஸியில் வறுத்தெடுத்த பொருட்களை போட்டு, அதில் தேவைக்கேற்ப புளி மற்றும் உப்பை சேர்த்து நைசாக அரைத்தெடுக்க வேண்டும்.
அதன் பின்னர், ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு, அதில் கடுகு, உளுத்தப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.
பிறகு அரைத்தெடுத்த விழுதை அதில் சேர்த்து 10 நிமிடம் கிளறி இறக்கினால் சுவையான இஞ்சி, பூண்டு துவையல் ரெடி.
குறிப்பு
தினமும் இந்த இஞ்சி, பூண்டு துவையலை சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் தேங்கும் சளியை கரைத்துவிடும்.
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகளவில் கொடுக்கும்.