தொப்பையைக் கண்டுக்காமல் விட்டால் நம்மை தாக்கும் மோசமான நோய்கள்!

life-style-health
By Nandhini Jul 01, 2021 05:49 AM GMT
Report

தற்போது பலருக்கும் இருக்கும் ஒரு பெரிய சவால் எது என்றால் அது வயிற்று தொப்பையைக் குறைப்பது தான். ஏனென்றால், நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு வருவதற்கு 90 சதவீத காரணம் தொப்பைதான்.

தொப்பையைக் குறைக்கும் முயற்சியில் நாம் ஒவ்வொருவரும் ஈடுபடாமல் இருந்தால், நாளடைவில் இந்த தொப்பையால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பல நோய்களை நமக்கு பரிசாக வந்து சேர்ந்து விடும்.

ஆண்கள் 40 இன்ச்சிற்கு அதிகமாக இடுப்பளவையும், பெண்கள் 35 இன்ச்சிற்கு அதிகமாக இடுப்பளவையும் கொண்டிருந்தால், அவர்களுக்கு குறிப்பிட்ட நோய்களின் தாக்கத்திற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தொப்பையைக் கண்டுக்காமல் விட்டால் நம்மை தாக்கும் மோசமான நோய்கள்! | Life Style Health

நுரையீரல் அடைப்பு

தொப்பை அதிகம் உள்ளவர்களுக்கு நுரையீரல் அடைப்பு நோய் அதிகம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

நுரையீரல் அடைப்பால் பாதிக்கப்பட்டவர்களால் சுவாசிக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாவார்கள்.

குறட்டை

தொப்பை உள்ளவர்கள், இரவில் தூங்கும் போது பலத்த சப்தத்துடன் குறட்டை விடுவதோடு, அவர்களால் நிம்மதியான தூக்கத்தையும் பெற முடியாது.

பித்தக்கற்கள்

அதிகளவு தொப்பை இருந்தால், பித்தக்கற்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் வயிற்றில் கொழுப்புக்கள் தேக்கம் அதிகரிப்பதால், பித்த நீர் சரியாக வெளியேற முடியாமல், பித்தப்பையில் கற்களாக உருவாக ஆரம்பிக்கும்.

மூளை பாதிக்கும்

இடுப்பைச் சுற்றி தேங்கும் கொழுப்புக்கள் பித்தப்பை, கணையம் மற்றும் கண்கள் போன்றவற்றை மட்டும் தாக்காமல், மூளையையும் பாதிக்கும்.

பக்கவாதம்

தொப்பை அதிகமாக உள்ளவர்களுக்கு பக்கவாதம் வரும் அபாயம் அதிகம் உள்ளது. மூளைக்கு தேவையான அளவு இரத்தம் செல்லாமல் மூளை செல்கள் இறப்பை சந்தித்து, அதனால் பக்கவாதத்தை ஏற்படுத்தும்.

இது வயிறு மற்றும் கல்லீரலில் அதிகப்படியான கொழுப்புக்கள் தேங்குவதால் ஏற்படுகிறது. இதை அப்படியே விட்டுவிட்டால், மோசமான நிலைமைக்கு தள்ளப்படுவீர்கள்.

நீரிழிவு நோய்

தொப்பை அதிகம் கொண்ட 40 வயதை தாண்டியவர்களுக்கு தாக்கும் ஓர் பொதுவான பிரச்சனை தான் நீரிழிவு. மேலும் நிறைய பேர் நீரிழிவு பிரச்சனையை சந்திப்பதற்கு தொப்பையும் ஓர் காரணமாக உள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதய நோய்கள்

அடிவயிற்றில் சேரும் கொழுப்புகளால் இதய நோய்கள் மிகவும் வேகமாக ஒருவரைத் தாக்குமாம். ஆகவே உங்களுக்கு இதய நோய்கள் வராமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், முதலில் உங்கள் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன், தொப்பையையும் கட்டுப்பாட்டுடன் வைத்து கொள்ள வேண்டும்.