அளவுக்கு அதிகமாக பால் குடித்தால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி தெரியுமா?
காலையில் எழுந்தவுடன் பலருடைய காலை பொழுது, ஒரு கிளாஸ் பால் கலந்த டீ, காபி போன்றவற்றில் தான் துவங்குகிறது.
பாலில் கால்சியம், வைட்டமின் பி12, விட்டமின் டி, புரோட்டீன், பொட்டாசியம், மினரல்கள், போன்ற பல ஊட்டச்சத்துகள் உள்ளதால், மக்களின் வாழ்க்கையில் இன்றி அமையாத ஒன்றாக உள்ளது.
பொதுவாக அனைவருக்கும் பால் குடித்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று தான் தெரியும். ஆனால் அந்த பாலை குடித்தால் ஏதாவது பிரச்சனைகள் உடலில் ஏற்படுமா என்று யாராவது யோசித்ததுண்டா?
ஒரு கிளாஸ் பாலில் அதிக அளவு கால்சியம் உள்ளது. பால் தினமும் குடித்தால் கால்சியம் சத்து கிடைக்கும். இதனால் எலும்புகள் உறுதியாகும், தசைகள் வளர்ச்சி அடையும் என்று கூறுவார்கள். ஆனால் அதற்காக அளவுக்கு அதிகமாகக் குடித்தாலும் ஆபத்து என ஆய்வுகள் கூறுகின்றன.
அதிகமாக பால் குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி பார்ப்போம் -
குமட்டல்
அதிகளவில் பால் குடித்தால், வயிற்றில் ஏற்படும் தாங்கிக் கொள்ள முடியாத உணர்வு ஏற்படும். இதனால் வாந்தி எடுக்கும் உணர்வு உண்டாகும். இது ஒரு வகையான லாக்டோஸ் சகிப்புத்தன்மையின்மை ஆகும். இதனால் பால் அல்லது பால் கலந்த பொருட்களை உட்கொண்ட உடனேயே செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
வாய்வுத் தொல்லை
பால் அதிகமாக குடித்தால், மாட்டின் பாலில் லாக்டோஸ் உள்ளது. இந்த லாக்டோஸ் செரிமான அமைப்பில் எரிச்சலை ஏற்படுத்தும். இதனால் வாய்வுத் தொல்லை உண்டாகும்.
குழந்தைகளுக்கு இரத்த சோகை
மாட்டின் பாலில் இரும்புச்சத்து குறைவாக இருக்கும். குழந்தைகள் அதிகமாக பால் குடிப்பதால், அவர்களுக்கு இரும்புச்சத்து அதிகமாக கிடைப்பதில்லை. குழந்தைகளுக்கு குடல் இரத்த இழப்பு ஏற்படும் போதும் கூட இரத்த சோகை ஏற்படும்.
சுவாச கோளாறுகள்
பால் அதிகமாக குடித்தால், மாட்டு வகைகளில் பீட்ட-சி.எம்.-7 என்ற புரதம் அடங்கியுள்ளது. இந்த குறிப்பிட்ட புரதம், சுவாச மற்றும் செரிமான பாதையில் சளியை உருவாக்கும்.
அலர்ஜிகள்
பால் அதிகமாக குடித்தால், பாலில் உள்ள புரதத்தினால் ஒருவருக்கு அலர்ஜி ஏற்படும். புரதங்களை நம் நோய் எதிர்ப்பு அமைப்பு செயல்பட தொடங்கிவிடும். அதனால் தான் உடலில் அலர்ஜி ஏற்படுகிறது.