சர்க்கரை நோயாளிகள் எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்ன்னு தெரியுமா?

life-style-health
By Nandhini Jun 30, 2021 06:04 AM GMT
Report
362 Shares

உலகிலேயே அதிகளவில் மக்கள் அவஸ்தைப்பட்டு வரும் ஒரு பிரச்சனை தான் சர்க்கரை நோய். குறிப்பாக இந்தியாவில் ஏராளமானோர் இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சர்க்கரை நோய் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது உணவுக் கட்டுப்பாடுதான். ஆனால் உண்மையில் உணவுக் கட்டுப்பாடு என்பதைவிட இதை உணவுமுறை மாற்றம் என்று கூறுவதே சரியானதாக இருக்கும்.

உணவுக் கட்டுப்பாடு என்று வயிற்றைப் பட்டினி போட்டு வருந்தவேண்டிய அவசியமில்லை. உணவு முறையை கடைப்பிடித்தால் மட்டுமே மாத்திரைகளும், இன்சுலின் ஊசியும் சர்க்கரையை குறைக்க உதவும். அதிக உணவு சாப்பிட்டு விட்டு அதிக மாத்திரை சாப்பிடுவது தவறு.

நீரழிவு நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்

ஒரு மனிதனின் கணையத்தில் உற்பத்தியாகும் “இன்சுலின்” ஹார்மோனின் குறைபாட்டால் ஒருவருக்கு ரத்தத்தில் சக்கரையின் அளவு அதிகரித்து, ஒட்டுமொத்த உடலியக்கத்தை பாதிப்பதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

பரம்பரை வழி, உணவு உண்ணாமல் இருப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்ற காரணங்களாலும் நீரிழவு நோய் ஏற்படுகிறது.

சர்க்கரை நோயாளிகள் எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்ன்னு தெரியுமா? | Life Style Health

நீரழிவு நோயின் அறிகுறிகள்

உடல் சோர்வு

அதிக அளவு பசி

அதிகளவு தாகம்

அடிக்கடி தலை சுற்றுவது

அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு

நீரழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகளைப் பற்றி பார்ப்போம்

கீரைகள்

அரைக்கீரை, கறிவேப்பிலை, புதினா கீரை, முசுமுசுக்கைகீரை, வல்லாரை கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கை கீரை, சிறுகீரை, மணத்தக்காளி கீரை, துத்தி கீரை ஆகிய கீரை வகைளில் ஏதேனும் ஒன்றை பொறியலாகவோ அல்லது ஏதேனும் ஒருவகையில் தினம் உட்கொள்வது சக்கரை நோயாளிகளுக்கு நல்லது.

பழங்கள்

நாவல்பழம், நெல்லிக்காய் ஆகியவற்றை வேண்டிய அளவு சாப்பிடலாம். மலைவாழை வாரத்திற்கு இரண்டு சாப்பிடலாம். தினம் மூன்று பேரிச்சம்பழம் சாப்பிடலாம். கொய்யா காய் சாப்பிடலாம். பப்பாளி, ஆப்பிள், விளாம்பழம் போன்றவற்றை ஒரு நாளைக்கு 50 கிராம் அளவு சாப்பிடலாம்.

காய்கறிகள்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாழைத்தண்டு, வாழைப்பூ, வெண்டைக்காய், முட்டைக்கோஸ், புடலங்காய், பாகற்காய்,சுண்டைக்காய் போன்ற காய்கறிகளை அதிகளவில் உட்கொண்டு வந்தால் உடலுக்கு நல்லது.

சுண்டல்

சர்க்கரை நோயாளிகள் தினமும் மாலையில் சுண்டல் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. உணவுகள் கோதுமை நார்ச்சத்து மற்றும் பல ஊட்டச்சத்துக்களைக் கொண்ட ஒரு தானியமாகும். கோதுமை கலந்த உணவுகளை தினம் இருவேளை சாப்பிடலாம்.

ஏலக்காய்

ஏலக்காயை பச்சையாக மென்று சாப்பிட்டு வந்தாலும், உணவில் சேர்த்துக் கொண்டாலும் இவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.

பூண்டு

நீரிழிவு நோயாளிகள் தினமும் பூண்டை உணவில் சேர்த்து வந்தால் உடலுக்கு நல்லது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

முட்டையில் உள்ள மஞ்சள் கரு, மாட்டிறைச்சி, ஈரல், மூளை, ஆட்டுக்கறி, இறால், நண்டு,முந்திரி, பாதாம்பருப்பு, நிலக்கடலை, ஆட்டுக்கால் சூப்.