வெறும் வயிற்றில் சோம்பு தண்ணீரை குடித்து வந்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா!

life-style-health
By Nandhini Jun 28, 2021 12:13 PM GMT
Report

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோம்பு ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டுள்ளது. பொதுவாக நம் நாட்டு சமையலில் சோம்பு அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்த சோம்பு பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், உணவில் வாசனையை அதிகரிக்க உதவுகிறது.

சோம்பு உணவின் மணத்தையும், சுவையையும் அதிகரிப்பதுடன் உடல் ஆரோக்கியம் மற்றும் பல நோய்களையும் குணப்படுத்தும் மருத்துவ பணிகளையும் செய்கின்றது.

ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சோம்பு தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் சோம்பில் உடலை சுத்தப்படுத்தும், மெட்டாபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.

சோம்பு உணவின் மணத்தையும், சுவையையும் அதிகரிப்பதுடன் உடல் ஆரோக்கியம் மற்றும் பல நோய்களையும் குணப்படுத்தும் மருத்துவ பணிகளையும் செய்கின்றது.

சோம்பு மருத்துவத்திற்குப் பயன்படும் ஓர் மூலிகைத் தாவரம் ஆகும். ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சோம்பு தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது.

சோம்பு எடுத்து அடிக்கடி மென்று வர வாய்க்கு புத்துணர்ச்சி கொடுப்பதுடன் துர்நாற்றத்தையும் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்க உதவும் சாக்லேட்கள், பேஸ்ட்களில் சோம்பு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது உமிழ்நீரையும் அதிக அளவில் சுரக்க செய்கிறது.

வெறும் வயிற்றில் சோம்பு தண்ணீரை குடித்து வந்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா! | Life Style Health

சோம்பு தண்ணீர் -

1 லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, அதில் 2 டேபிள் ஸ்பூன் சோம்பை சேர்த்து அறை வெப்பநிலையில் குளிர வைத்து பின் தினமும் குடித்து வர வேண்டும்.

வெறும் வயிற்றில் சோம்பு தண்ணீரை குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் -

இரத்தத்தை சுத்தப்படுத்த

சோம்பு தண்ணீர் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்தும். சிறுநீரகங்களின் பிரச்சினை சோம்பு தண்ணீரை குடித்து வந்தால், உடலிலிருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி சிறுநீரகங்களில் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கும்.

மாதவிடாய்

வெறும் வயிற்றில் சோம்பு தண்ணீர் குடித்தால், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி பிரச்சனை சரியாகும்.

பசியை அடக்கும்

சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால், அது இயற்கையிலேயே பசியை அடக்கும். இதனால் கண்ட கண்ட உணவுகளை சாப்பிடாமல் இருக்கலாம்.

நிம்மதியான தூக்கம்

சோம்பு தண்ணீரை குடித்து வந்தால், மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் மெலடோனின் எனப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தை பெற வழிவகுக்கும்.

உடல் எடை குறைக்க

சோம்பு தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை எரித்து, உடல் எடையைக் குறைக்க உதவும்.