அதிகளவில் முந்திரி சாப்பிட்டால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி தெரிஞ்சுக்கோங்க!
எந்த பலகாரங்கள், இனிப்பு வகைகள் என இருந்தாலும் அதில் முந்திரி பருப்பு இல்லாமல் நாம் சாப்பிடுவது கிடையாது. காரணம் அந்த அளவுக்கு முந்திரியின் சுவை எல்லோருக்கும் பிடிக்கும்.
பொதுவாக முந்திரியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பி காணப்படுகின்றன. இதை உட்கொள்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.எனவே அவ்வப்போது ஸ்நாக்ஸ் வேளையில் முந்திரி சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
கொழுப்பு சத்தை தவிர 100 கிராம் முந்திரியில் 550 கலோரிகள், தாமிரம், துத்தநாகம், மாங்கனீஸ், மெக்னீசியம் போன்ற தாதுக்களும் நார்ச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் B, கால்சியம், குரோமியம் போன்ற சத்துக்களும் அடங்கி உள்ளன.
சிறுநீரக கற்கள்
அதிகமாக முந்திரி சாப்பிட்டால், உடலால் கால்சியத்தை உறிஞ்ச முடியாமல் அவை சிறுநீரகங்களில் கற்களை உருவாகிவிடும்.
தைராய்டு
அதிகளவில் முந்திரி சாப்பிட்டால், தைராய்டு மருந்துகள் மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்துகளில் இடையூறை ஏற்படுத்தும்.
தலைவலி
முந்திரி அதிகமாக சாப்பிட்டால் தலைவலி அதிகரிக்கும். முந்திரியில் உள்ள அமினோ அமிலங்கள் காரணமாக கடுமையான தலைவலியை ஏற்படுத்தும்.
உடல் பருமன்
அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், அது உடல் பருமனை அதிகரித்துவிடும்.
உயர் இரத்த அழுத்தம்
அதிகமாக முந்திரியை சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
இதய நோய்
உப்புள்ள முந்திரியை அதிகளவில் உட்கொண்டால், அது பக்கவாதம், சிறுநீரக நோய் அல்லது இதய நோய்க்கு வழிவகுக்கும்.