மூட்டு வலி, கை - கால் வலியால் அவதியா? வலி பறந்து போக இந்த கீரையை தொடர்ந்து சாப்பிடுங்க!

life-style-health
By Nandhini Jun 26, 2021 12:51 PM GMT
Report
171 Shares

பொதுவாக இக்கீரை தமிழகம், வங்காளம் முதலிய இடங்களில் நன்கு வளர்கின்றது. முடக்கத்தான் கீரை கசப்புச்சுவை உடையது. இதனை அடையாகத் தட்டி உண்பது வழக்கம். பொதுவாக தோசை மாவுடன் கலந்து தோசை சுட்டுச் சாப்பிடுவார்கள்.

முடக்கத்தான் கீரையில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், புரதம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.

நம் முன்னோர்கள், 2000 வருடங்களுக்கு முன்பே இயற்கை மருத்துவ குணம் கொண்ட கீரையை, நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதுதான் முடக்கத்தான் கீரை.

மூட்டு வலிக்கு இயற்கையிலே மிகச்சிறந்த மருந்து உள்ளது. முடக்கத்தான் கீரையை பயன்படுத்தினால் நிச்சயம், எந்த ஒரு பக்கவிளைவுகளும் இன்றி மூட்டுவலி குணமாகும்.

மூட்டு வலி எவ்வாறு வருகிறது?

  • சிறுநீரை உடனடியாக கழித்துவிடாமல், நாம் அடக்கி வைத்துக்கொள்கிறோம். இது மிகவும் ஆபத்தான ஒன்று. நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால் இது உடலின் பிற பகுதிகளுக்கு சென்று விடுகிறது.
  • அவ்வாறு செல்லும்போது, ரத்தத்தில் உள்ள யூரிக் ஆசிட் கிரிஸ்டல்ஸ் (uric acid crystals) மூட்டுகளில் படிந்து விடுகிறது. இந்த சிறு, சிறு கற்கள், சினோரியல் மெம்கிரேம் எனும் இடத்தில் தங்கிவிடுகிறது. இது பல வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தால், 35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி ஏற்படுகிறது.

மூட்டு வலி, கை - கால் வலியால் அவதியா?  வலி பறந்து போக இந்த கீரையை தொடர்ந்து சாப்பிடுங்க! | Life Style Health

முடக்கத்தான் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம் -

நரம்பு தளர்ச்சி, மூட்டுவலி நீங்க

முடக்கத்தான் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி நீங்கி நரம்புகள் வலிமை பெறும் .

மேலும் மூட்டுவலி, கழுத்து வலி, இடுப்பு வலியை நீக்குவதில் சிறந்த மூலிகையாகும். முடக்கத்தான் கீரையுடன் உளுந்து, புளி, சின்ன வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கி சேர்த்து வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வர மூட்டு வீக்கம் குறையும்.

முடக்கத்தான் இலைகளை நெய்யில் வதக்கி, இஞ்சி, கொத்தமல்லி, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சட்னி அல்லது துவையல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் மூட்டு சம்மந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

முதுகு வலி, உடல் வலி

இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் கைகால் வலி, மூட்டுவலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் பறந்து போகும்.

மூட்டுகளில் தங்கி இருக்கும் புரதம், யூரிக் அமிலம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், மற்றும் கொழுப்புத் திரட்சி படிவங்களை கரைத்து, வலிகளை போக்க வகை செய்யும். முடக்குவாத பிரச்சினைக்கு முடக்கத்தான் என்றாலே முடக்கு வாத சம்பந்தமான பிரச்சினைகளை நீக்க கூடிய மூலிகையாகும். 

கண் நோய்

முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி சாப்பிட்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

கீல் பிடிப்பு, கீல் வாதம்

முடக்கத்தான் கீரையை சமைத்து சாப்பிட்டால், கீல் பிடிப்பு, கீல் வாதம், கால்களை நீண்ட, மடக்க முடியாமல் இருப்பது, நடக்க முடியாமல் இருப்பது போன்றவை குணமாகும்

காது வலி

முடக்கத்தான் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி அகலும்.

கர்பிணி பெண்களுக்கு

முடக்கத்தான் கீரையை அரைத்து கர்பிணி பெண்களின் அடிவயிற்றில் பூசி வர சுக பிரசவம் கிடைக்கும். மேலும் குழந்தை பெற்ற பெண்களின் அடிவயிற்றில் இந்த முடக்கத்தான் கீரையை அரைத்து பூச கருப்பையில் உள்ள நச்சுகள் வெளியேறும்.

தலைவலிக்கு

தலைவலி பிரச்சனை உள்ளவர்கள் முடக்கத்தான் இலைகளை நன்கு கசக்கி, வெண்ணீரில் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி நீங்கும்.

விரை வீக்கம்

விரை வீக்கம் உள்ளவர்கள் முடக்கத்தான் இலையை அரைத்து பற்று போட்டுவர விரை வீக்கம் குணமாகும்.