உங்கள் நகங்களின் நிறம் காட்டும் உடல் ஆரோக்கியத்தை தெரிந்து கொள்ளுங்கள்!

life-style-health
By Nandhini Jun 26, 2021 10:03 AM GMT
Report

நகங்களை சாதாரணமாக நினைக்காதீர்கள். நகங்கள் தான் ஒருவரின் ஆரோக்கியத்தின் கண்ணாடி போன்றது. ஏனென்றால் ஒருவரின் உடலில் ஏதாவது நோய் அல்லது ஏதேனும் குறைபாடு இருந்தால் அதை நகங்கள் சில அறிவுகுறிகள் மூலம் வெளிப்படுத்தி விடும் என தோல் நோய் நிபுணர்கள் கூறுகின்றனர்.

நமது நகங்களின் அழகு, வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் இவற்றிற்கு வைட்டமின் பி பெரிதும் பங்களிக்கிறது. திடீரென நகங்களில் தோன்றும் மாற்றத்தை நாம் தவறாமல் கவனிக்க வேண்டும்.

நகங்களை பற்றி

  • கெரட்டின் என்னும் உடல்கழிவுதான் நகமாக வளர்கிறது. கழிவுகள் நீங்குவது உடலுக்கு நலம் தானே? நகத்தில் மேட்ரிக்ஸ், நெயில்ரூட் என்று இரு முக்கிய பாகங்கள் உண்டு. மேட்ரிக்ஸ் நகத்தின் இதயப் பகுதியாகும். இதுதான் நக செல்கள் வளர காரணமாக அமைகின்றது. மேட்ரிக்ஸ் பாதித்தால் தொடர்ந்து நகம் சேதத்துடனேயே வளரும்.
  • வெளிப்புறம் நகங்களாக இருக்கும் நெயில் பிளேட் கழிவுப் பொருள் என்பதால் அதற்கு ஒக்சிஜன் தேவையில்லை. ஆனால் உட்புறம் இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கிடிகிள் போன்ற பாகங்களுக்கு ஒக்சிஜன் அவசியம். எனவே அவை தேவையான ஒக்சிஜனை சுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்கிறது.
  • இதில் கிடிகிள், விரல் பகுதிக்கு அதிக இரத்த ஓட்டம் கிடைக்க உதவுகிறது. நகத்தில் 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. எனவே நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றும்.
  • நகங்கள் நமது ஆரோக்கியம் காட்டும் ‘மொனிட்டர்’ போலவும் செயல்படும். நகங்களின் நிறம் மாறுவதைக் கொண்டு உடல் நலம் பாதிக்கப்படுவதைக் கண்டுபிடிக்கலாம்.

உங்கள் நகங்களின் நிறம் காட்டும் உடல் ஆரோக்கியத்தை தெரிந்து கொள்ளுங்கள்! | Life Style Health

உங்கள் விரல் நகங்களின் நிறத்தை வைத்தே உங்கள் உடம்பில் என்னென்ன நோய்கள் உள்ளன என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் -

மெல்லிய நகங்கள்

நகங்கள் மென்மையாக இருந்தால் உடலில் மிகவும் ஊட்டச்சத்துக்கள் குறைபாடு இருக்கிறது என்று அர்த்தம்.

மங்கிய நிற நகங்கள்

மங்கிய நிறத்தில் நகங்கள் இருந்தால், இரத்த சோகை, இதய நோய்கள், கல்லீரல் கோளாறு பிரச்சினை ஏற்படும்.

நீல நிற நகங்கள்

இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு, நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் கலந்திருந்தால் நகங்கள் நீல நிறத்தில் இருக்குமாம்.

கருப்பு கோடு விழுந்த நகங்கள்

நகங்களின் மீது கருப்பு நிறத்தில் கோடுகளாக விழுந்திருந்தால் அவை தோல் புற்றுநோய் இருப்பதை குறிக்குமாம்.

வெள்ளை நகங்கள்

நகம் பார்ப்பதற்கு வெள்ளையாகவும், கடினமாகவும் இருந்தால் உங்களுக்கு மஞ்சள் காமாலை உள்ளது என்று அர்த்தம்.

மஞ்சள் நிற நகங்கள்

நகங்கள் பார்ப்பதற்கு மஞ்சள் நிறத்தில் இருந்தால் அவர்களுக்கு சர்க்கரை நோய், நுரையீரல் கோளாறு, தைராய்டு பிரச்சினை உள்ளது என்று அர்த்தம்.

உடைந்த நகங்கள்

நகங்கள் அடிக்கடி உடைந்து போனால், தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யவில்லை என்று அர்த்தம்.

வீங்கிய நகங்கள்

வீங்கியது போன்று நகங்கள் இருந்தால், சீரான ரத்த ஓட்டம் உடலில் இல்லையென்று அர்த்தம்.

சிவந்த சொறிப்பு போன்ற நகங்கள்

நகங்கள் பார்ப்பதற்கு வித்தியாசமாக சிவந்து சொறி ஏற்பட்டது போன்று இருந்தால் அவர்கள் சொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று அர்த்தம்.

நாம் கவனமாக செய்ய வேண்டியவை-

  • நகத்தினை பற்களால், கடிக்க கூடாது. இதனால் உடைந்து போக அதிக வாய்ப்புகள் உள்ளன.
  • இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கி விடலாம்.
  • நகங்களின் நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக் கூடாது.அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும்.
  • சாப்பிட்ட பின்பு, கைகளை கழுவும் போது நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.
  • நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரிகளால் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுபோக்கு உண்டாகும்.
  • பளபளப்பாக இருக்க வேண்டுமெனில், காய், கனிகள் உட்கொள்ள வேண்டும்.
  • இரவில் குளிர்ந்த நீரால், கை மற்றும் கால்நகங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.