ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை பெருக்க இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தாலே போதும்!
இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்சனை இருக்கிறது. இத்தகைய பிரச்சனை வருவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சில பழக்கவழக்கங்கள் தான் காரணம்.
மேலும் கருவுறுதல் பிரச்சனை பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் தான் இருக்கும். எனவே இந்த மாதிரி பிரச்சனை என்றதும் பெண்கள் மட்டும் நல்ல சரியான உணவுகளை உண்டால் மட்டும் போதாது, ஆண்களும் தான் ஒரு சில உணவுகள் மற்றும் செயல்களை மேற்கொள்ள வேண்டும்.
ஆண்களுக்கு இருக்கும் குடி மற்றும் புகையிலை பழக்கங்கள் தங்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைத்துவிடுகிறது.
ஒரு சிலரின் விந்துக்கள் ஆரோக்கியமாக இருந்தாலும் சில பிரச்சினைகளில் மூலமாக அது அழிந்துவிடும். இதைத் தடுப்பதற்கு நாம் கீழ்க்காணும் உணவுகளை எடுத்துக் கொண்டால், விந்தணுவின் உற்பத்தி அதிகரிப்பதோடு அதன் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
விந்தணுக்கள்
விந்து நீரில் உள்ள விந்தணுக்களின் எண்ணிக்கை, விந்தணுக்களின் உயிர்ப்புத்தன்மை ஆகியவையே ‘ஆண்மை’-க்கு மிகவும் முக்கியமானது. இதில் விந்தணுக்களின் உயிர்ப்புத்தன்மை என்பது, ஒரு விந்தானது ஆக்டிவ்வாக செயல்படுதல் மற்றும் கருமுட்டையை சென்றடைந்தால். ஏனெனில் விந்தணு விரைவாகச் சென்று கருமுட்டையை அடைந்தால் தான் கரு உருவாகும்.
ஆண் மலட்டுத்தன்மை
ஆண் மலட்டுத்தன்மை என்பது, குறைந்த அளவிலான விந்தணு எண்ணிக்கையும், விந்தணு உயிர்ப்பில்லாமல் நீர்த்துப்போதலுமேயாகும். மேலும், இதனால் ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை குறைவது, வீரியம் குறைவது, ஆண்மையும் குறைவது போன்ற சிக்கல்களும் கூடவே வருகிறது.
இந்தப் பிரச்சினைக்கு கீழ்க்காணும் உணவுகளை தினமும் சாப்பிட்டு வந்தாலே இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடலாம் -
அத்திப்பழம்
ஆண்மை நீங்க மற்றும் விந்தணு அதிகரிக்க அத்திப்பழத்தை 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரியாகும்.
மாதுளம் பழம்
மாதுளையில் அதிக ஆன்டி ஆக்சிடென்டுகள் இருப்பதால், சீரான விந்து அணு உற்பத்தி மற்றும் விந்து அணு ஆரோக்கியம் மேம்படுகிறது. மாதுளையை பழமாக, பழச்சாறாக என்று எந்த வடிவில் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
தக்காளி
தக்காளியை உணவில் அதிகமாக சேர்த்து கொள்வது, ஆண்களின் விந்து அணுக்களின் நீந்து சக்தியை அதிகரித்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
டார்க் சாக்லேட்டுகள்
இவற்றில் உள்ள சில சத்துக்கள் விந்து அணுக்களின் ஆரோக்கியம் மற்றும் விந்து அணுக்களின் நீந்து சக்தி உள்ளிட்டவற்றை அதிகரிக்க உதவுவதாக கூறப்படுகிறது.
தண்ணீர்
தினசரி மூன்று முதல் 4 லிட்டர் அளவு தண்ணீர் பருகினால் உடலில் நீர்ச்சத்து மேம்பட்டு விந்து அணுக்களின் ஆரோக்கியம் மற்றும் நீந்து சக்தி மேம்படுத்தப்படும். ஆண்களின் உடலில் வெப்பம் அதிகரித்தால், அதனால் விந்து அணுக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் நீர்ச்சத்து உதவும்.
எள்ளுப்பூ
எள்ளுப்பூவை எடுத்து சுத்தம் செய்து பசும்பாலில் போட்டு நன்கு காய்ச்சி சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். அரசமர விதை விந்து அதிகரிக்க, அரசமரத்தின் விதையை தூள் செய்து அதை சாப்பிட்டு வருதல் நல்ல பயன் தரும். இதனால் ஆண்மை குறைப்பாடு குறையும்.
பேரீச்சம்பழம்
இரவில் பேரீச்சம்பழத்தை ஆட்டுப்பாலில் ஊற வைத்து மறுநாள் காலையில் ஏலக்காய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.
பாதாம்
பாதாம் பருப்புகளுடன், ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் சேர்த்து இரவில் அருந்தி வந்தால், விந்து உற்பத்தி மேம்படும் அதனால் விரைவில் ஆண்மை குறைபாடுகளில் இருந்து தீர்வு பெறலாம்.