தினமும் கொய்யா இலை நீர் குடித்து வந்தால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்குமாம்!

life-style-health
By Nandhini Jun 25, 2021 07:57 AM GMT
Report
429 Shares

கொய்யா பழத்தின் இலை, கனி, பட்டை என்று அதனுடைய அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தது. கொய்யா இலைகளை முன்பெல்லாம் மருத்துவத்தில் பயன்படுத்தினார்கள்.

ஒரு பழுத்த கொய்யா நான்கு ஆப்பிளுக்கு சமமான சக்தியை கொண்டுள்ளது என்று மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் கொய்யா இலையில் பன்மடங்கு பல நன்மைகள் அடங்கியுள்ளன.அற்புதமான பண்புகளையும் பயன்களையும் கொய்யா இலை கொண்டுள்ளது.

கொய்யா இலையில் புரதம், விட்டமின்கள் B6, கோலைன், விட்டமின் C, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி போன்ற அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ளது.

குடி போதையில் உள்ளவர்களுக்கு போதையை உடனே முறிக்க கொய்யா இலையை உண்ண கொடுத்தால் உடனே வெறி இறங்கும் என்று சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தலையில் ஏற்படும் அரிப்பிற்கு கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒருமுறை ஸ்கால்ப்பில் படும்படி தடவி ஊறவைத்து அலசினால் முடி உதிர்வை தடுக்க முடியும்.

தினமும் கொய்யா இலை நீர் குடித்து வந்தால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்குமாம்! | Life Style Health

கொய்யா நீரின் எண்ணற்றப் பலன்களைப் பற்றி பார்ப்போம்

கொய்யா இலை நீர்

ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி அதனை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும். இந்த கொதிக்கும் தண்ணீரில் தேவையான அளவு கொய்யா இலைகளை போட வேண்டும்.

இந்த தண்ணீரை 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து பின்னர் இந்த நீரை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போ கொய்யா இலை நீர் தயார்.

நீரிழிவு நோய்க்கு

கொய்யா இலையை வெயிலில் காய வைத்தோ அல்லது பச்சையாகவோ நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ செய்து, 12 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால், அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை குணமாக்குகிறது.

இருமல்

கொய்யா இலையில் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல் மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு நல்ல தீர்வினைத் தருகிறது.

உடல் எடை குறைய

கொய்யா இலையின் சாறு எடுத்து அதோடு சிறிது தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால், விரைவில் உடல் எடை குறைவதை உணரலாம்.

செரிமானம்

கொய்யா இலை தேனீர் அல்லது கொய்யா சாற்றை அருந்தினால் செரிமான நொதி உற்பத்தியை அதிகரித்து உணவு நச்சை குறைக்கிறது.

முடி வளர்ச்சிக்கு

கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குளிர்ந்த பிறகு தலையில் மசாஜ் செய்து வந்தால் முடி உதிர்வது நின்று முடி பலம் பெறும்.

முகப்பரு

நீங்க கொய்யா இலையில் உள்ள வைட்டமின் சி முகப்பரு உருவாவதை தடுக்கிறது.

பல்வலி

வைட்டமின் சி அதிக அளவு இருப்பதால் பற்களின் ஈறுகளில் இரத்தப்போக்கு மற்றும் வீக்கம் ஆகியவற்றின் சிகிச்சையில் பயனுள்ளதாக இருக்கும்.

விந்தணு உற்பத்திக்கு

ஆண்கள் கொய்யா இலையை டீ போட்டு குடித்து வந்தால், விந்தணுவின் உற்பத்தி அதிகரிப்பதோடு, விந்தணுவின் தரமும் அதிகரிக்கும்.