வெறும் வயிற்றில் மட்டும் தப்பித்தவறி கூட இவற்றை சாப்பிட்டு விடாதீங்க! பின் விளைவை சந்திப்பீங்க!
காலை உணவு அன்றைய நாளின் முதல் உணவாக இருப்பதால், எதைச் சாப்பிட வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். இது நாள் முழுவதும் நம் உடலை சீராகவும் சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ள உதவும். இல்லையெனில் ஒருவர் எந்த நேரத்திலும் நோய்வாய்ப்படக்கூடும்.
ஆரோக்கியமான உணவுகள் பல உள்ளன. ஆனால் அவற்றை சரியான நேரத்தில் உட்கொள்வது என்பது மிகவும் முக்கியமானது. புதிய ஆய்வின் படி, சில உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிய வந்துள்ளது.
இதற்கு காரணம், அந்த உணவுகளில் உள்ள ஆசிட்டுகளும், வயிற்றில் உள்ள படலத்தை பாதிக்கும் வகையிலான பொருள் இருப்பதும் தான் காரணம். ஒருவேளை நீங்கள் டயட்டில் இருந்து, வெறும் பழங்களை மட்டுமே சாப்பிடுபவராயின், காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரைப் பருகி பின் பழங்களை உட்கொள்ளுங்கள்.
இப்போது காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போம் -
காரமான உணவு
வெறும் வயிற்றில் காரமான உணவை சாப்பிட்டால் இரைப்பையில் எரிச்சல் ஏற்படுத்தும். உணவு செரிமானம் ஆகாமல் போய்விடும்.
தக்காளி
தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. அதில் உள்ள ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும்.
புளிப்பான பழங்கள்
வெறும் வயிற்றில் புளிப்பான பழங்களை சாப்பிட்டால் அமிலத்தன்மை அதிகம் இருக்கும். அவை இரைப்பையில், அதிக அமிலத்தன்மையை ஏற்படுத்தி அல்சர் வர காரணமாகி விடும்.
சாக்லேட்
வெறும் வயிற்றில் சாக்லேட், சுவீட்கள் போன்ற இனிப்பு பலகாரங்களை சாப்பிடக்கூடாது. அவை இன்சுலின் அளவை அதிகப்படுத்திவிடும்.
தயிர்
வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடக்கூடாது. அதில் இருக்கும் நல்ல பாக்டீரியா நொதித்து வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.
மாத்திரை
பொதுவாகவே வெறும் வயிற்றில் மாத்திரை சாப்பிடக்கூடாது. அது வயிற்றில் உள்ள அமிலத்துடன் கரைந்து வயிற்று படலத்தை அரிக்க தொடங்கிவிடும். தேவையற்ற உடல் உபாதைகள் உண்டாக காரணமாகிவிடும். டாக்டர் பரிந்துரைத்தால் வெறும் வயிற்றில் மாத்திரை சாப்பிடலாம்.
டீ, காபி
வெறும் வயிற்றில் டீயோ, காபியோ பருகுவது தவறான பழக்கம். அதில் உள்ள ‘காபின்’ வயிற்று உபாதைகள் தோன்ற வழிவகுத்துவிடும். குமட்டல், இரைப்பை அழற்சி போன்ற அசவுகரியங்களை உண்டாக்கும்.