அடர்த்தியா முடி வளர வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க... அசந்து போயிடுவீங்க...!
ஆண் (அ) பெண் என இரு பாலினத்தவரிடமும் முடியின் ஆரோக்யத்தைப் பற்றியக் கவலை உள்ளது. அனைவருக்கும் முடி அழகாகவும், நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.
உடல் தோற்றப் பொலிவில் கூந்தலுக்கு முக்கிய இடம் உண்டு. கோரை முடி, சுருள்முடி, வறண்ட முடி, மென்மையான முடி, அலையலையான முடி என்ற ஒவ்வொருவரின் தலைமுடியும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும்.
பெண்கள் அனைவருக்குமே நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தல் வளர வேண்டுமென்ற ஆசை அதிகமாகவே உள்ளது. சிலருக்கு அது வெறும் கனவாகவே உள்ளது.
இந்த பிரச்சனைக்கு இந்த காலத்தில் வயது வரம்பு கிடையாது. இளைஞர்கள் , கர்ப்பிணிகள், தாய்மார்கள், ஆண்கள் என்று அனைவருக்குமே இந்த முடி கொட்டும் பிரச்சினை அதிகளவு காணப்படுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.
முடி கொட்ட காரணங்கள் -
- ஹார்மோன் சமநிலையின்மை
- ஊட்டச்சத்துக் குறைபாடு
- அதிக அளவு மாசு
- பரம்பரை பிரச்சனை
- அதிக மன அழுத்தம்
- தூக்கமின்மை
- சரியாக தண்ணீர் குடிக்காமல் இருத்தல்
ஆயில் மசாஜ்
முடியின் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் அதிகரிக்க சிறந்த வழியெனில், அது வாரம் ஒருமுறை தவறாமல் சூடான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து, நன்கு ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் அடர்த்தி மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.
சீப்புகளைப் பயன்படுத்தவும்
சீப்புகளைக் கொண்டு தலையை சீவும் போது, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும். எனவே தினமும் 3-4 முறை தலைக்கு சீப்பை பயன்படுத்துங்கள். இதனால் மயிர்கால்கள் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
முடி அடர்த்தியாக வளர என்னென்ன செய்யலாம் என்று பார்ப்போம் -
- ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி / செம்பரத்தை பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.
- முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய் தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.
- செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.
- கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.
- கடுக்காய், செவ்வரத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.
- வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.