தூங்கும் முன் தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் விட்டால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பாருங்க!

life-style-health
By Nandhini Jun 23, 2021 08:37 AM GMT
Report

நம் உடலில் தொப்புள் மிகவும் மென்மையான ஆற்றல் வாய்ந்த பகுதி. மிகவும் சக்தி வாய்ந்த பகுதி என்றும் சொல்லலாம்.

தொப்புளை நாபிக் கமலம் என்கிறார்கள். கமலம் என்றால் தாமரை. தாய் மூலமாக உருவாகும் கரு முதலில் தொப்புள் கொடி மூலமாக தான் உருவாகிறது. அதன் சுவாசம், உணவு எல்லாமே தொப்புள் கொடி மூலமாக தான். அதனால் தான் தொப்புள் கொடி உறவு என்கிறோம்.

இப்படி அறிவியலையும் தாண்டி நமது தொப்புள் நிச்சயமாக ஒரு ஆச்சர்யமான விஷயம் தான்.

ஒருவர் இறந்த பிறகும் அவருடைய தொப்புள் சுமார் மூன்று மணி நேரங்களுக்கு சூடாக இருக்கும் என்கிறது மருத்துவத்துறை.

ஆண், பெண் எல்லோருக்குமே தொப்புளுக்கு பின்னால் உடலின் 72,000க்கும் அதிகமான நரம்புகள் இருக்கின்றன.

கரு வளரும்பொழுது முதலில் தொப்புள் பகுதி தான் உருவாக்கப்படுகிறது. அந்த தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியும் இணைகிறது. அதற்கு காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. இதனால் தொப்புள் பகுதி எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.

தூங்கும் முன் தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் விட்டால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பாருங்க! | Life Style Health

தினமும் இரவில் தூங்கச் செல்லும் முன் தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் விட்டு தூங்கினால்  கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம் - 

கண்பார்வை

தினமும் இரவு தூங்கச் செல்லும் முன் உங்கள் தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் விட்டு தூங்கினால் கண் பார்வை தெளிவடையும், கம்ப்யூட்டர், மொபைல் சதா சர்வ காலமும் பார்ப்பதால் நிறைய பேருக்கு கண் வறட்சி உண்டாகிறது. அவர்களுக்கு இந்த வைத்தியம் வரப்பிரசாதம். கண்கள் வறட்சி, கண்பார்வை குறைப்பாடு போன்றவற்றை குணப்படுத்தும்.

பாத வெடிப்பு

தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் விட்டு தூங்கினால், உடல் சூட்டினால் உண்டாகும் பித்தவெடிப்பு குணமாகும். தலைமுடி ஆரோக்கியமாக செழித்து வளரும்.

உடல் சோர்வு

இரவில் படுக்கப் போகும் முன் தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் விட்டு தூங்கினால் உடல் நடுக்கம், சோர்வு மற்றும் கணைய பாதிப்புகள் குணமாகும். கர்ப்பப்பை வலுப்பெறும். நல்ல தூக்கம் வரும்.

வேப்பெண்ணெய்

வேப்பெண்ணெயை தொப்புளில் 3 சொட்டு விட்டு தூங்கினால் சரும வியாதிகளும், தொற்றுகளும் குறையும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். உடல் நச்சுக்கள் அழியும்.

நெய்

இரவு படுக்கச் செல்லும் போது நெய்யை தொப்புளில் 3 சொட்டு விட்டால், முகம் அழகு பெரும் மற்றும் சருமம் மென்மையாக இருக்கும்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்யை தொப்புளில் தினமும் இரவு 3 சொட்டு விட்டால், முகம் பளபளப்பாகவும் சருமம் பொலிவுடனும் காணப்படும்.

கடுகு எண்ணெய்

உடல் வெப்பத்தின் காரணமாக உதடுகளில் வெடிப்பு ஏற்படும். கடுகு எண்ணெய்யை 3 சொட்டு தொப்புளில் விட்டு தடவினால் சூடு தணியும்.

விளக்கெண்ணெய்

முழங்கால் வலி உள்ளவர்கள், விளக்கெண்ணெய்யை தினமும் இரவில் படுக்கும் முன் தொப்புளில் 3 சொட்டு விட்டால் முழங்கால் வலி குறையும்.