ஆன்மீகம் - கனவில் கடவுளை கண்டால் இந்த பலன்களெல்லாம் கிடைக்குமாம்!
ஆழ்ந்த தூக்கத்தின் பொழுது நம்மை அறியாமல் நம் நினைவில் வந்து போகும் சில விஷயங்களை தான் ‘கனவு’ என்கிறோம். இந்த கனவுகள் பெரும்பாலும் பலிப்பதில்லை. ஒரு சிலருக்கு எப்பொழுதாவது மட்டும் சில கனவுகள் உண்மையில் நடந்திருக்கும் அல்லது நடக்க இருக்கும்.
இப்படி கனவுகள் ஒவ்வொருவருக்கும் பலவிதமான கேள்விகளை மனதிற்குள் எழுப்பிக் கொண்டே இருக்கின்றன. பொதுவாக நாம் தூங்கும் போது பல சுவாரஸ்யமான, விறுவிறுப்பான கனவுகள் வரும். பெரும்பாலும் கனவு கண்ட உடனேயே அக்கனவில் 50% மறந்துவிடுவோம் என்று அறிவியல் கூறுகிறது. மீதிக் கனவில் ஒரு சில விஷயங்கள் மட்டுமே நமக்கு நினைவில் இருக்குமாம்.
அப்படி ஓரளவு நினைவில் இருக்கும் கனவிற்கு என்ன அர்த்தம் என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நம் அனைவருக்குமே இருக்கும். நம்முடைய ஆழ்மனதில் இருக்கும் எண்ணங்கள் தான் கனவாக வெளிப்படுகின்றன. சிலருடைய மனதில் நல்லதையே நினைத்து கொண்டிருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நல்ல கனவு வருவதுண்டு.
கெட்டது ஏதாவது நடந்துவிடுமோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் சிலருக்கு கெட்ட கனவு வருவது உண்டு. நம்முடைய தேவையற்ற மற்ற சிந்தனைகளை எல்லாம் விட்டுவிட்டு, நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும், இறைவனை மட்டும் அதிகமாக சிந்திப்பவர்களுக்கு அந்த இறைவன் அவர்களுடைய கனவில் காட்சி தருகின்றார்.
கனவில் கடவுளை கண்டால் கிடைக்கும் பலன்களைப் பற்றி பார்ப்போம்
- கனவில் கோவிலை கண்டால் இறைவனின் அருளால் விரைவில் நினைத்த விஷயங்கள் நடந்து முடியும்.
- கோவிலுக்குள் செல்ல முடியாமல் கூட்டத்தில் மாட்டிக் கொள்வது போல் கனவு வருமேயானால், சில எதிர்பார்க்காத பிரச்சனையில் சிக்கிக்கொண்டு கஷ்டபடுவீர்கள் என்று அர்த்தம்.
- ஆலயத்தில் நாம் மட்டும் தனியாக இருந்து கோவில் கதவுகள் சாத்தப்பட்டது போல் கனவு வந்தால் நாம் செய்து வரும் தொழிலில் பிரச்சனை ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
- கோவிலின் வாசலை திறந்து உள்ளே செல்வது போல் கனவு வந்தால் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்
- கனவில் கடவுளுக்கு மாலை அணிவிப்பது போல கனவு வந்தால் நல்ல வளர்ச்சியை அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.
- எந்த கடவுளை கனவில் கண்டாலும் பிரச்சனைகள் விலகும்.
- எல்லோரையும் வெற்றி கொள்ளும் சக்தி உங்களுக்கு கிடைக்கும்.
- ஒரு கோவில் கோபுரத்தை கனவில் கண்டால், வாழ்க்கையில் முன்னேற போகிறீர்கள் என்று அர்த்தம்.மேலும் உங்களின் பாவங்கள் நீங்கி விட்டது என்றும் பொருள்.
- கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தைப் பெற்றுக்கொள்வது போல் கனவு வந்தால் சிலரால் மன கவலைகள் ஏற்படும் என்று பொருள்.
- கோவில் தெப்பத்தை கனவில் கண்டால் நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.
- கடவுளிடம் பேசுவது போல் கனவு காண்பது மிகவும் நல்லது, இது விரைவில் நன்மை பெற போவதன் அறிகுறியாகும்.
- விஷ்ணுவை எந்த கோலத்தில் கனவில் கண்டாலும் செல்வ செழிப்பு ஏற்படும்.
- விஷ்ணு கருடன் மீது வருவது போல கனவு கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.
- ஏசுவை கனவில் கண்டால் மனதில் அமைதி ஏற்படும்.
- ஏசுவை சிலுவையில் அறைவது போல கனவு வந்தால் துன்பம் வரும்.ஆனால் அது விரைவில் மாறிவிடும்.
- காளியை கனவில் கண்டால் குடும்பத்தில் தேவையற்ற சண்டை சச்சரவுகள் ஏற்படும்.
- கடவுள் விக்கிரகத்தை கனவில் கண்டால் அந்த கடவுளை தரிசனம் செய்வது உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நல்லது.
- கோவில் மணியை கனவில் கண்டால் நினைத்த காரியம் வெற்றியுடன் முடியும்.
- கோவில் மணி அடிப்பது போல கனவு கண்டால் பொருள் வரவு உண்டு.
- கோவில் மணி அறுந்து விழுவது போல கனவு கண்டால் செய்யும் காரியங்கள் இடையூறுகள் ஏற்படும்.
- நாம் திருநீறு பூசிக்கொள்வது போல கனவு வந்தால் நல்ல ஞானம் பிறக்கும். கோவில் கனவில் வந்தால் நல்ல பலன்கள் ஏற்படபோகிறது என்று பொருள்.
- சிதிலமடைந்த கோவிலை கனவில் கண்டால் செய்யும் செயல்களில் தோல்வியும், பொருள் நஷ்டமும் ஏற்படும்.
- கோவிலில் இறைவனை கும்பிடுவது போல கனவு வந்தால் நாம் செய்யும் செயல்களில் முதலில் சில இடர்பாடுகள் ஏற்படும்.
- ஆனால் தெய்வ அருளால் முடிவில் எல்லாம் நன்மையாகவே முடியும்.
- கோவிலுக்கு சென்று விட்டு இறைவனை தரிசிக்க முடியாமல் திரும்புவது போல் கனவு கண்டால் உங்களுக்கு தீராத பிரச்சினை ஒன்று காத்திருக்கின்றது என்பது அர்த்தம்.
- கடவுள் உங்களிடம் பேசுவது போல கனவு வந்தால் இந்த ஜென்ம புண்ணியத்தை நீங்கள் அடைந்ததாக அர்த்தம்.
- எந்த கடவுளை கடவுளை கண்டாலும் அது நல்ல சகுணம் தான் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.