அடடா... தினமும் தண்ணீர் அதிகம் குடித்தால் எவ்வளவு நன்மை இருக்கா? நீங்களே பாருங்க!

life-style-health
By Nandhini Jun 22, 2021 11:27 AM GMT
Report

உணவின்றி கூட சில நாட்கள் வாழ்ந்திடலாம். ஆனால் நீரின்றி வாழ முடியாது. உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைக்காவிட்டால் உடல் உறுப்புகளின் இயக்கமும் சீராக இருக்காது. அழகை தரக்கூடிய சிறப்பான ஒரு உணவு என்று சொன்னால், அது தண்ணீர் தான். தண்ணீர் குடிப்பதால், உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன.

அதிலும் தண்ணீரைக் குடிப்பதால், உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும் நல்ல ஆரோக்கியமாக செயல்படும். தண்ணீரே பெரும்பாலானவர்கள் குடிப்பது கிடையாது. சிலர் ஆறு மணி நேரத்துக்கு தண்ணீர் குடிக்காமல் இருப்பார்கள் இது தவறு.

ஏனெனில் ஆரோக்கியமாக உள்ளவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் உடலிலிருந்து கழிவுகள் முழுமையாக வெளியேறாது. இதனால் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படும். ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு தினமும் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறினால்தான் இயல்பு நிலை என்று அர்த்தம்.

தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடிப்பது அப்படியில்லாமல், அடிக்கடி தண்ணீர் குடிக்கப் பழக வேண்டியது அவசியம்.

[

தண்ணீர் நிறைய குடித்தால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம் -

சரும அழகு கூடும்

ஒரு கிளாஸ் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கும்போது சருமத்திற்கு தேவையான நீரேற்றம் கிடைப்பதால் மென்மையான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம். அழகு கூடும்.

செரிமானப் பிரச்னை தீரும்

காலை எழுந்ததும் வயிறு செய்யும் முதல் செரிமானம் தண்ணீராக இருந்தால் அன்றைய நாள் முழுவதும் உங்கள் செரிமானம் சீராக இருக்கும். செரிமானப் பிரச்னையே வராது.

உடல்எடை குறைக்க

தூங்கி எழுந்ததும் 60 நொடிகளில் நீர் குடித்து வருவதன் மூலம் பசியின் அளவைக் குறைத்து, அதிக அளவு உடல் பருமன் ஏற்படுவதைக் குறைக்கிறது.

பசியைத் தூண்டும்

தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும்.

அல்சரைத் தடுக்கும்

காலையில் சாப்பிடாமல் அலுவலகத்திற்கு செல்பவர்கள், தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், அல்சர் ஏற்படாமல் தடுக்கலாம்.

நச்சுக்களை வெளியேற்ற

தண்ணீரானது நமது உடலின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்கள் மற்றும் கிருமிகளை சிறுநீர் மூலமாக வெளியேற்றி, எப்போதும் நமது உடலின் சுறுசுறுப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.

குடலை சுத்தப்படுத்த

குடலானது சுத்தமாக இல்லாவிட்டால், முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். இப்படி பருக்கள் வந்தால் சருமமானது அழகை இழந்துவிடும். எனவே தினமும் தண்ணீரைக் குடித்து வந்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, முகம் பருக்களின்றி பொலிவுடன் காணப்படும்.