மாத்திரை அட்டையில் ஏன் EMPTY SPACE இருக்கிறதுன்னு தெரியுமா? தெரிஞ்சுக்கோங்க!
நம்மில் பலரும் இப்போது சாதாரணமாக சின்னத் தலைவலி, இருமல் என்றால் கூட மருந்துக் கடைக்குச் சென்று மாத்திரை வாங்கி வந்து சாப்பிடுவோம். அப்போது, மாத்திரை அட்டையில் இடைவெளி இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
ஆனால், பலருக்கு அது ஏன் என்பது கூட தெரியாது. அதைப் பற்றி யோசித்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். அதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். சில மருந்துகள் என்ன தான் மருந்து அட்டையில் பிளாக்குகளில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தாலும் அதன் வேதியியல் மாற்றங்கள் வெளியில் வந்துவிடும்.
இரண்டும் ஒரே மருந்துதான் என்றாலும் ஒன்றோடு ஒன்று சேரும்போது வேதியியல் மாற்றம் நிகழந்து விடக்வடாது என்பதற்காக சில மாத்திரை அட்டைகளில் இடைவெளி இருக்கும். மருந்து அட்டைகளின் பின்னால் அதில் இருக்கும் பயன்கள், மூலப்பொருள்கள், தயாரிப்பு இடம், உற்பத்தியாளர் விபரங்கள் அச்சடிக்கப்பட வேண்டும். அதற்கான இடத்துக்காகவும் சில நிறுவனங்கள் எம்டி ஸ்பேஸ் விடும்.